| முரல்குரற் றும்பி யவிழ்மல ரூத | 35 | யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப் பாணி முழவிசை யருவிநீர் ததும்ப ஒருங்கு பரந்தவை யெல்லா மொலிக்கும் இரங்கு முரசினான் குன்று; தாழ்நீ ரிமிழ்சுனை நாப்பட் குளித்தவண் | 40 | மீநீர் நிவந்த விறலிழை கேள்வனை வேய்நீ ரழுந்துதன் கையின் விடுகெனப் பூநீர்பெய் வட்ட மெறியப் புணைபெறா தருநிலை நீரி னவடுயர் கண்டு கொழுநன் மகிழ்தூங்கிக் கொய்பூம் புனல்வீழ்ந்து | 45 | தழுவுந் தகைவகைத்துத் தண்பரங் குன்று; வண்டார் பிறங்கன் மைந்தர் நீவிய தண்கமழ் சாந்தந் தைஇய வளியும் கயல்புரை கண்ணியர் கமழ்துக ளுதிர்த்த புயல்புரை கதுப்பக முளரிய வளியும் | 50 | உருளிணர்க் கடம்பி னெடுவேட் கெடுத்த முருகு கமழ்புகை நுழைந்த வளியும் |
85. யாழினது இசையை மேன்மேலு ................. 36. பாணியென்னுந் தாளத்தையுடையமுழவிசைபோல. 37. இவ்வாற்றால் தம்முள்வேறுபட்டனபலவும் ஒருங்கொலிக்கும். 39 - 45. நீரொலிக்கின்ற ஆழ்ந்த சுனைநடுவே மூழ்கி அவ்விடத்து நீர் மேலெழுந்த விறலிழைகரையில் நிற்கின்ற கேள்வனைப் புணையாகிய வேயைநீரில் அழுந்துகின்ற தன் கையின்கட் டருகவெனஅவன் அதனைக் கொடாது அரக்குநீர் கரந்த வட்டைஎறிதலாற் புணைபெறாது அவள் அரு நிலையான நீரிற்படுகின்ற துயரத்தைக்கண்டு கொழுநன் இன்புற்றுப்பின் அந்நீரின்கண் வீழ்ந்து தழுவும்தன்மையினையுடைத்து. 46. பிறங்கற்கண். 47. சந்தனத்தைத்தடவிப் புலர்த்துங் காற்றும். 48 - 9. கமழ்தாதுதிர்த்த கதுப்பகத்தைஊடுபுக்கு அசைத்த காற்றும். 50 - 51. கடம்பின்கண் மேவிய நினக்குப்பூசைக்கட் காட்டும் பாத்திரத்தெடுத்தகமழ்புகையூடு நுழைந்த காற்றும். 50. நெடுவேள் : முன்னிலைப்பெயர். (பி - ம்.) 41 ''வேய்நீர்த் தன்கையிற் புணையவை விடுகென'' 42 ''பூநீர் செய்'' 44 ''கொய்பூ நீரமபுனல் வீழ்ந்து'' 47 ''தைஇயவளிவளியும்'' |