பக்கம் எண் :

220

22. உரை.சீவக.587 2447; கம்ப.சூர்ப்பநகை. 60

23. நிழல் காண்மண்டிலம்-கண்ணாடி; அகநா.71.

30-32. மேகவொலி தாளமாக மயிலாடுதல்: ''''ஆலி மாமுகி லதிர்தர வருவரை யகடுற முகடேறிப் பீலி மாமயி னடஞ்செயுந் தடஞ்சுனைப் பிருதி'''' (பெரியதிருமொழி1. 2 : 1); சூளா.சீய. 194. மயிலின் விரித்த சிறைக்கு ஆலவட்டம் உவமை: ''நீல ஆலவட்டம் விரித்தாற் போலத் தன் கோலக் கலாவம் கொள விரித்து........இளமயிலாடுவது'' (இறை.2 உரை); ''''நீல வாலவட் டத்தி னிறங்கொளக் கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல் ஆலு மாமழை நீண்முகி லார்த்தொறு மாலு மாமயிலாலுமொர் பாலெலாம்'''' (சூளா.நாடு. 15)

35. யாணர் வன்டினம் - பூக்களாகிய புதுவுருவாயினையுடைய வண்டினம்; 17 : 10 உரை.

36. உரை.பாணி-ஒரு தாளத்தின் முதல் எடுக்குங் காலத்தைத் தன்னிடத்தேயுடையது; கலித்.கட. .

30-37. மயில் முதலியனவும் அவற்றுக்குரிய உவமைகளும். 17 : 9-20 குறிப்புரை.

42. பூநீர்பெய் வட்டம்: பரி. 11 : 55 குறிப்புரை.

39-42. ''''கூடியார் புனலாடப் புணையாய மார்பினில் ஊடியா ரெறிதர வொளிவிட்ட வரக்கினை'''' (கலித்.72 : 15-6)

49. கதுப்பகம் உளரிய வளி: ''''விரைவளர் கூந்தல் வரைவளியுளர'''' (புறநா.133 : 4 குறிப்புரை.)

50. பரி.5 : 81 21 : 11. நெடுவேள் : பரி. 14 : 20.

52. பரி. 8 : 128-30.

59. ஆடும் மகளுக்குப் பூங்கொடி : 17 : 15-6.

60. உருட்டுந்துடி : ''''உருடுடிமகுளியின்'''' (அகநா.19 : 4); ''''துடியுருட்டி விம்ம'''' (பு. வெ.29 பி-ம்.) 60-61. துடியாட்டு: 19-20:

70. தேய்த்த-இல்லையாக்கிய. (21)

இருபத்திரண்டாம் பாடல்

வையை

பாண்டியவரசன்போரின்கண் யானைகளை வரிசையாகநிறுத்தினாற்போல மேகங்கள் வானத்தில்நெருங்கின; அவனுடைய போர் முரசு ஆர்ப்பதுபோலஅம்மேகங்கள் இடிமுழக்கம் செய்தன; அவன்பகைவர்மீது சொரியும் அம்புக்கூட்டத்தைப்போலமழைத் துளிகள் சிதறின; அவனது வேலைப் போலமின்னல் ஒளிவிட்டது. அவனுடைய வள்ளன்மையைப்போல மேகங்கள் மழைபெய்தன; அவனுடைய படை எங்கும்நிறைந்ததுபோல வெள்ளம் எங்கும் பரந்துவயல்களிற் புகுந்தது; வையையில் வெள்ளம் மிக்கது.