பக்கம் எண் :

221

அப்போது நீர் விளையாட்டிற்கேற்றஅணிகளுடன் மகளிரும் மைந்தரும் மதுரையிலிருந்துபுறப்பட்டனர். பத்துவகைத் துவர்களையும்.புகைக்கப்படும் பொருள்களையும், சந்தனத்தையும்,நீர் வீசு கருவிகளையும், கள்ளையும்,பூந்துகில்களையும் பலர் ஏந்திக் கொண்டு பின்தொடர்ந்தனர். மைந்தர்களும் மகளிரும், இவர்கள்செய்த தவப்பயன் பெரிதென்று கண்டார் கூறும்படிவையைக்கரையில் நெருங்கினர். அம்மகளிரால் வையைஅழகு பெற்றதோ, வையை வெள்ளத்தால் அவர் அழகுபெற்றனரோ என்பதைத் தேர்தல் அரிது. அவ்விருதிறத்தாரையும் கரையையும் வையை சேர்கின்ற அழகுதேர்தற்கு அரிது. முழவின் ஒலிக்கு எதிரே இடி மாறாகமுழங்கியது; வீணை ஒலிக்க அதனெதிரிலேபூஞ்சினைகளில் வண்டினங்கள் ஒலித்தன; குழலோசைஉண்டாக அதற்கு மாறாகத் தாதை ஊதுகின்ற தும்பிஒலித்தது. காற்றாகிய நட்டுவன் பூங்கொடியாகியவிறலியை ஆடச்செய்தான். இங்ஙனம் தம்முள்மாறுகொள்ளும் நிகழ்ச்சிகள் வையைக்கண்ணுள்ளதிருமருத முன்றுறையில் நிகழ்ந்தன.

*** *

(22)ஒளிறுவாட் பொருப்ப னுடல்சமத் திறுத்த
களிறுநிரைத் தவைபோற் கொண்மூ நெரிதர
அரசுபடக் கடந்த வானாச் சீற்றத்தவன்
முரசதிர் பவைபோன் முழங்கிடி பயிற்றி
5ஒடுங்கா ருடன்றவன் றானை வில்விசை
விடுங்கணை யொப்பிற் கதழுறை சிதறூஉக்
கண்ணொளி ரெஃகிற் கடிய மின்னியவன்
வண்மைபோல் வானம் பொழிந்தநீர் மண்மிசை
ஆனாது வந்து தொகுபீண்டி மற்றவன்
10தானையி னூழி.......தாவூக் கத்திற்
போன நிலமெல்லாம் போரார் வயல்புகுத
.....................................................நீக்கி பபு......................................
கான மலைத்தரை கொனறு மணல பினறி
வான மலைத்த...........வ............................................