பக்கம் எண் :

222

15.............லைத்தவ மணமுர செறிதரத்
தானைத் தலைத்தலை வந்துமைந் துற்றுப்
பொறிவி யாற்றுறி துவர்புகை சாந்தம்
எறிவன வெக்குவ வீரணிக் கேற்ற
நறவணி பூந்துகி னன்பல வேந்திப்
20பிறதொழின.......ம் பின்பின் றொடரச்
செறிவினைப் பொலிந்த செம்பூங் கண்ணியர்
ஈரமை வெட்சி யிதழ்புனை கோதையர்
தாரார் முடியர் தகைகெழு மார்பினர்
மாவுங் களிறு மணியணி வேசரி
25காவு நிறையக் கரைநெரி பீண்டி
வேலாற்று மொய்ம்பனின் விரைமல ரம்பினோன்
போலாற்று முன்பிற் புனைகழன் மைந்தரொடு
தாரணி மைந்தர் தவப்பயன் சான்மெனக்
காரணி கூந்தல் கயற்கட் கவிரிதழ்
30வாரணி கொம்மை வகையமை மேகலை

(பரி - ரை.) * * * *

18 - 9. ........ய நறவு.

19. ஆணி-ஆபரணம்..........

20. பின்னே பின்னே தொடர முற்பட்டு.

21 - 2. மகளிர் செறிந்த தொடைத்தொழிலாற்பொலிந்த.....மாலையராய் வாடாமையமைந்த.........சக........கோதையராய்.

23. மைந்தர் தாரார்ந்த முடியராய்ச் சுற்றிய மாலைபொருந்திய மார்பினராய்.

24. வேசரி - கோவேறுகழுதை.

25. நெரிய ஈண்டி..........காவின்கண் நிறைய.

26 - 8. வேற்போரைச் செய்யும் மொய்ம்பினையுடையோனாகிய முருகனைப்போல ஆற்றலோடுகூடிய வலியினையும் புனைகழலையுமுடைய மைந்தரும் விரைமலரம்பினோனாகிய காமனைப்போலத் தாரையும் அழகினையுமுடைய மைந்தரும் செய்த தவத்துப்பயன் பெரிதென்று கண்டார் கூற.

29. கவிர் - முருக்கு.

30. கொம்மை - இளமுலை. வகைவகையாகக் கோத்த மேகலை.

சான்மென (28) என்னும் வினையெச்சம். இனிய நகையினையும் (31) உடையவென இரண்டாவதனொடு விரிந்த பெயரெச்சவினை கொண்டது.