பக்கம் எண் :

225

3. அரசுபடக்கடத்தல் : (மதுரைக்.128; ''''அரைசு படக்கடந்தட் டாற்றிற் றந்த முரைசுகெழுமுதுகுடி'''' (கலித்.105 1 - 2) ; புறநா.211 : 6.

4 - 7. இடிக்கு முரசொலியும் எஃகொளிக்குமின்னலும் : பரி.4 : 19; ''''கைவண் செழியன் ஆலங்கானத் தமர்கடந் துயர்த்த வேலினும் பல்லூழ்மின்னி முரசென மாயிரு விசும்பிற் கடியிடி பயிற்றி''''(அகநா.175); ''''நிடதநா டளிக்கும் மன்னர் மன்னவன்மண்டமர் கடந்தவொள் வேலின் மின்னி யாங்கவன்முரசென விண்ணிடை யதிர்ந்து'''' (நைடதம்நாட்டு.2)

6. உறை - துளி. மழைத்துளிக்குக் கணைஉவமை: ''''பெயலுறழக் கணைசிதறி'''' (மதுரைக். 183);''''கார்த்துளி கடுப்பக் கடுங்கணை சிதறி'''' ''''கணைத்துளிபொழிந்த கார்வரைச் சாரல்'''' (பெருங். 3. 27 : 98- 9 121)

7. ''''செல்வக் கடம்பமர்ந்தான் வேன்மின்னி''''(ஐந்திணைஐம்பது 1)

8. வண்மைபோல் வானம் பொழிந்தநீர்: 4 : 27; ''''பொழிபெயல் வண்மையான்'''' (கலித்.57 :12); புறநா. 54 : 6-7 குறிப்புரை.

18. எக்குதல்: 16 : 45. ஈரணி: 6 : 28 7 :61.

28. தவப்பயன் சான்மென: ''''அருந்தவமாற்றியார் நுகர்ச்சி போலணிகொள'''' (கலித்.30)

39. (மேற்.) சீரிடமென்பதுவாய்த்த இடமென இறந்தகால வினைத்தொகையாம்;''புகர்வரி வண்டு என்புழி புகர்த்த வரிவண்டு எனப்பொருள் கொள்ளுதல் போல'' (திருக்குறள் நுண்பொருண்மாலை821)

42 - 3. துடிக்கூத்து : 21 : 19 - 20 குறிப்புரை.

45. திருமருத முன்றுறை : 7 : 83 குறிப்புரை.

49. நித்திலச் சிலம்பு : 21 : 18; சிலப்.20 : 67. (22)