பக்கம் எண் :

227

அப்பூமுடிநாகர் திருக்கோயிலில்வண்டும் தும்பியும் யாழைப்போல முரலும்; மதயானைமேகத்தைப்போல முழங்கும்; அருவியிசையும்முழவொலியும் ஒருங்கே ஆர்க்கும்; மகளிரும்மைந்தரும் கூடிச் செய்யும் ஆடலும் பாடலும்தோன்றும்; இத்தகையனவும் இவை போல்வன பிறவும்அங்கே பொருந்தும்.

வரைவாய் முதலிய கல் சேர்கிடக்கைக் குளவாயமர்ந்தான் திருக்கோயிலில்மகளிர் மைந்தரோடு வந்து இறைஞ்சுவர். இருளும்பிணியும் நீங்க நல்லவையெல்லாம் அங்கேபொருந்தும்.

கடலைக் கடந்த காலத்தில்மலையைக் கடலில் நட்டு அவுணரும் அமரருமாகியஇருதிறத்தினரும் அமுது கடைவதற்குநாணாகியிருந்தவனும் ஆதிசேடனே; வன்மையெல்லாம்பூண்டவனும் அவனே; உலகத்தைத் தன் தலையில்ஆபரணத்தைப் போலத் தாங்கினவனும் அவனே;விடைப்பாகராகிய சிவபெருமான் திரிபுரத்தைஅழித்த காலத்தில் மேருமலையாகிய வில்லுக்குநாணாக இருந்து புகழ்தந்தவனும் அவனே.

அத்தகைய சிறப்பையும் ஆயிரம்திருமுடிகளையுமுடைய ஆதிசேஷனை வணங்கித் திருமாலைஏத்தி யாமெல்லாம் எம் சுற்றத்தோடு நின்னைப்பிரியாது வழிபடும்பொருட்டுப் பரவுகின்றேம்;அருள்புரிவாயாக.

1திரட்டு

(1)

2வானா ரெழிலி மழைவள நந்தத்
தேனார் சிமைய மலையி னிழிதந்து
நான்மாடக் கூட லெதிர்கொள்ள வானா
மருந்தாகுந் தீநீர் மலிதுறை மேய


1 மூலமும் உரையும் தொடர்ச்சியாக இருந்த கையெழுத்துப் பிரதிகளிற் காணப்படாமல் பண்டையுரையாசிரியர்களாற் காட்டப்பட்ட மேற்கோள்களிலிருந்தும் புறத்திரட்டிலிருந்தும் தெரிந்த பரிபாடல்கள்.

2 இப்பாடல் தொல்காப்பியம்செய்யுளியல் சூ 121 பேராசிரியர் நச்சினார்க்கினியருரைகளிற் கண்டது.

(பி-ம்.) 1 ''மழைவளந்தந்த''