| இருந்தகையூரமர்ந்த செல்வநின் திருந்தடி தலையுறப் பரவுதுந் தொழுது (இதுதரவு) ஒருசார் அணிமலர் வேங்கை மராஅ மகிழம் பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர் போங்கி மணிநிறங் கொண்ட மலை; |
10 | ஒருசார் தண்ணறுந் தாமரைப் பூவினிடையிடை வண்ண வரியிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப விண்வீற் றிருக்குங் கயமீன் விரிதகையிற் கண்வீற் றிருக்குங் கயம்; ஒருசார் சாறுகொ ளோதத் திசையொடு மாறுற் |
15 | றுழவி னோதை பயின்றறி விழந்து திரிநரு மார்த்து நடுநரு மீண்டித் திருநயத் தக்க வயல்; ஒருசார் அறத்தொடு வேதம் புணர்தவ முற்றி விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் |
20 | திறத்திற் றிரிவில்லா வந்தண ரீண்டி அறத்திற் றிரியா பதி;(இவை நான்கும் கொச்சகம்) ஆங்கொருசார் உண்ணுவ பூசுவ பூண்ப வுடுப்பவை மண்ணுவ மணிபொன் மலைய கடல பண்ணிய மாசறு பயந்தரு காருகப் |
25 | புண்ணிய வணிகர் புனைமறு கொருசார் விளைவதை வினையெவன் மென்புல வன்புலக் களம ருழவர் கடிமறுகு பிறசார் ஆங்க அனையவை நல்ல நனிகூடு மின்பம் இயல்கொள நண்ணி யவை;(இது கொண்டு நிலை) |
30 | வண்டு பொரேரென வெழ வண்டு பொரேரென வெழும் கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டிக் கடிப்பிகு காதிற் கனங்குழை தொடர |