| மிளிர்மின் வாய்ந்த விளங்கொளி நுதலார் |
35 | ஊர்களிற் றன்ன செம்ம லோரும் வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத் தொளியிழை யொதுங்கிய வொண்ணுத லோரும் புலத்தோ டளவிய புகழணிந் தோரும் நலத்தோ டளவிய நாணணிந் தோரும் |
40 | விடையோ டிகலிய விறனடை யோரும் நடைமட மேவிய நாணணிந் தோரும் கடனிரை திரையிற் கருநரை யோரும் சுடர்மதிக் கதிரெனத் தூநரை யோரும் மடையர் குடையர் புகையர்பூ வேந்தி |
45 | இடையொழி வின்றி யடியுறையா ரீண்டி விளைந்தார் வினையின் விழுப்பயன் றுய்க்கும் துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும் இருகே ழுத்தி யணிந்த வெருத்தின் வரைகெழு செல்வ னகர்; |
50 | வண்டொடு தும்பிபும் வண்டொடை யாழார்ப்ப விண்ட கடகரி மேகமொ டதிரத் தண்டா வருவியொ டிருமுழ வார்ப்ப அரியுண்ட கண்ணாரொ டாடவர் கூடிப் புரிவுண்ட பாடலொ டாடலுந் தோன்றச் |
55 | சூடு நறவொடு காம மகிழ்விரியச் சூடா நறவொடு காமம் விரும்ப இனைய பிறவு மிவைபோல் வனவும் அனையவை யெல்லா மியையும் புனையிழைப் பூமுடி நாகர் நகர்; (இவையும் கொச்சகம்) |
60 | மணிமரு டகைவகை நெறிசெறி யொலிபொலி அவிர்நிமிர் புகழ்கூந்தற் |