பக்கம் எண் :

230

பிணிநெகிழ் துளையினை தெளியொளி திகழ்ஞெகிழ் தெரியரி மதுமகிழ் பரிமலர் மகிழுண்கண் வாணுதலோர்
மணிமயிற் றொழிலெழி லிகன்மலி திகழ்பிறி திகழ்கடுங் கடாக்களிற் றண்ண லவரோ
டணிமிக வந்திறைஞ்ச வல்லிகப்பப் பிணிநீங்க நல்லவை யெல்லா மியைதருந் தொல்சீர் வரைவாய் தழுவிய கல்சேர் கிடக்கைக் குளவா யமர்ந்தா னகர்;
(இது முடுகியல்)

திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத்
65திகழ்பெழ வாங்கித்தஞ்சீர்ச்சிரத் தேற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பி னிருதிறத் தோர்க்கும்
அமுது கடைய விருவயினா ணாகி
மிகாஅ விருவட மாழியான் வாங்க
70உகாஅ வலியி னொருதோழங் காலம்
அறாஅ தணிந்தாருந் தாம்;
மிகாஅ மறலிய மேவலி யெல்லாம்
புகாஅவெதிர் பூண்டாருந் தாம்;
மணிபுரை மாமலை ஞாறிய ஞாலம்
75அணிபோற் பொறுத்தாருந் தாஅம் பணிவில்சீர்ச்
செல்விடைப் பாகன் றிரிபுரஞ் செற்றுழிக்
கல்லுயர் சென்னி யிமயவி னாணாகித்
தொல்புகழ் தந்தாருந் தாம்;
(இவையும் கொச்சகம்)

அணங்குடை யருந்தலை யாயிரம் விரித்த
80கணங்கொள் சுற்றத் தண்ணலை வணங்கி
நல்லடி யேத்திநிற் பரவுதும்
எல்லேம் பிரியற்கெஞ் சுற்றமொ டொருங்கே.

(என்பது ஆசிரியச்சுரிதகம்)

(பி - ம்.) 61 ''துணையிணை'' ''திகழபு'' 62 ''லிகலிமலி திகழவிழ'' 63''வல்லலிகப்ப'' ''மேய்தருந்'' 65 ''திகழ்வெழ'' ''சிரத்தொற்றி'' 69 ''விருபடம்'' 70''தோளங்கால'' 79 ''அன்னவணங்குடை'' 82 ''எல்லாம்பிரியற்க வெஞ்சுற்றம்''