குறிப்புரை
3. நான்மாடக் கூடல் : பரி.திரட்டு. 6. 11; ''''மாடம்பிறங்கிய மலி புகழ்க் கூடல்'''' (மதுரைக்.429); ''''நான்மாடக்கூடன் மகளிரும் மைந்தரும்'''' (கலித்.92); ''''நான்குமாடம் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று: அவைதிருவாலவாய் திருநள்ளாறு திருமுடங்கை திருநடுவூர்;இனிக் கன்னி கரியமால் காளி ஆலவாயென்றுமாம் (கலித்.92 ந.); ''''கன்னிதிரு மால்காளியீசன் காக்குங் கடிமதில்சூழ் மாமதுரை'''' (திருவால.பயன்முதலியன.)
5. இருந்தையூர் ஸ்ரீ இருந்த வளமுடையார் கோயிலென்ப; சிலப். 18. 4.அரும்பத. சங்கப்புலவர்களின் பெயர்களுள் இவ்வூரைஅடுத்த பெயர்களாக இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்இருந்தையூர் கொற்றம் புலவன் என இரண்டு பெயர்கள்காணப்படுகின்றன.
6. திருந்தடி-இலக்கணத்தால் திருந்திய அடி;பிறக்கிடாத அடியுமாம்; புறநா.7 : 2 உரை. 7.மராஅம்-வெண்கடம்பு.
8. பிணிநெகிழ் பிண்டி-அரும்புகள் அவிழ்ந்த அசோகமரம்.
9. மணிநிறங்கொண்டமலை: 74; ''''மணிமலை'''' (சிறுபாண்.1); ''''மண்ணுறுமணியிற் றோன்றும் தண்ணறுந் துறுக லோங்கிய மலையே'''' (குறுந்.367 : 6-7); ''''மணிநிறமால்வரை'''' ''''மணிநெடுங்குன்றே'''' ''''மணிநிறங்கொண்ட மாமலை வெற்பின்'''' (ஐங்.208 209 224); ''''மண்ணாமணிபோலத் தோன்றுமென் மேனியைத் துன்னான் றுறந்தான் மலை'''' (கலித்.41 : 33-4)
19. ''''மண்ணாணப்புகழ்பரப்பியும்'''' (புறநா.166)
19-20. அந்தணரியல்பு : பதிற். 24 : 6-8.; பு. வெ.163.
26. மென்புலம்-மருதமும் நெய்தலும்; வன்புலம் - குறிஞ்சியும்முல்லையும்;
7 : 9 குறிப்புரை.
33. கனங்குழை-கனவியகுழை யென்பர் பரிமேலழகர்; குறள்1081;பொன்னாற்செய்த குழையென்பர் நச்சினார்க்கினியர்; கலித்.66 : 13. உரை.
36. பனிச்சை - முன்னுச்சிமயிர்.
38. புலம் -அறிவு.
39. நாணணிந்தோர்: ''''எஞ்ஞான்றுமெங்கணவ ரெந்தோண் மேற் சேர்ந்தெழினும் அஞ்ஞான்றுகண்டேம்போ னாணுதுமால்'''' (நாலடி.385)
40. ''''செல்லுமழவிடைபோற் செம்மாந்து'''' (நள.சுயம். 156)
42. கடலில் வரிசையாக வருகின்ற அலைகளைப்போலக் கரியநிறத்தினிடையே நரைமயிர் விரவப்பெற்றவர்; பரி.10 : 22.
43. ''''நிலவுநூற்றன்ன பித்தை நெடுந்தவர்'''' (கூர்ம. அநுக்கிர. 31)
46-7.வினையின் நற்பயனைத் துய்க்கின்ற துறக்கம் : 19 : 10-11 குறிப்புரை.
50. வண்டு தும்பி இவற்றின் ஓசைக்கு யாழோசை : 22 : 38-9.
51. யானைமுழக்கிற்கு மேகமுழக்கம் : 8 : 19-20 குறிப்புரை.