செயல் வண்ணங் காட்டிய சேயோன் -உயிரனைத்தும் காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவிபூட்டுந் தனியாழிப் பொற்றேரோன்'' (இராசராச.)என்பதால் ஆதிப்பிரமனிடத்துத் தோன்றிய பிரமர்பதின்மரென்பதும் அவருட் காசிபரொருவர் என்பதும்பிறவும் அறிக.
8. தருமனும் மடங்கலும்: மடங்கலுங்கணிச்சியுங் காலனுங் கூற்றும் (கலித்.105 :20); கூற்றம் வேறு யமன் வேறென்பது சொற்பல சொல்லியென்கொலுயிர் வீசுபாசம் விடுகாலன் யாவர்துணையேபற்பல கோடியண்ட மொருதண்டி லெற்றும் யமராசன் யாவர்படையே (தக்க. 444) அந்தக னத்துணை யமைச்சனாகிய வெந்திறற் காலனை விளித்து (கந்த.மார்க்கண்டேய. 216) என்பவற்றாலும் விளங்கும். தேவர்மருத்துவர் - அசுவினி தேவர்கள்.
உரை.குதிரைப்பெட்டை : ஒட்டகங்குதிரை கழுதை மரையிவை பெட்டையென்னும் பெயர்க்கொடைக்குரிய (தொல். மரபு. 52). கூற்றம்யமனுடைய ஏவலாளன் : தருமராசற்கா வந்த கூற்றினைக்குமைப்பர் போலும் (தே.); தக்க.444.
11. வாய்மொழி : 1 ; 63 குறிப்புரை.
10 - 11. உரை. திணைவிராய் ........ :பலவயினானு மெண்ணுத் திணைவிரவுப் பெயர் அஃறிணைமுடிபின செய்யு ளுள்ளே (தொல். கிளவி. 51); குறள்.920 பரிமேல்.
14. அந்தணரருமறை : 1 : 13 குறிப்புரை.
16. உரை.ஒட்டம் - பந்தயம் :நின்னை வெல்லி னொட்டம் யாவு நீகொடுக்க(வி. பா. சூதுபோர். 172)
18. சேவல் 1 : 11 குறிப்புரை. ''நிவந்தோங்கு. . .சேவலோய்'' என்ற வழிச் சொல்லுவான் குறிப்புமாயவனை நோக்கலிற் சேவல் கருடனாயிற்று (தொல்.கிளவி. சூ. 53. தெய்வச்.)
17 - 8. பயந்தோள் ....... சேவலோயே:கொடியோயென விகுதி பிரித்தல் வேண்டுமென்பர்; பிரயோக.19.
(மேற்.) ''கழிபெருங்காரிகையென்புழி ஒரு பொருட்பன்மொழி பற்றி இவ்வுயிர்அழகது சிறப்பு உணர நின்றதென்றார்......; பரிபாட்டினுள்நிவந்தோங்குயர் கொடிக்கும் இவ்வாறுரைத்தார்என்பது'' (திருக்குறள் நுண்பொருள் மாலை 571)
19 - 20. உரை. ''தமிழ்கூறு நல்லுலகத்து''என்னுமிடத்தும் உலகினுட் பாகுபாட்டை உலகென்றார்;நாவல் பெயரிய ஞாலம் (பு. வெ.126). 21. கூற்றமும்ஞமனும் : 8 குறிப்புரை.
(மேற்.) 23. தக்க. 340 உரை.
23 - 4. வராகாவதாரம் : 2 : 15 - 9.
25. உரை. புட்கல முதலிய மேகங்கள்: சம்வர்த்தம் ஆவர்த்தம் புட்கலாவர்த்தம் சங்காரித்தம்துரோணம் காளமுகி நீலவருணம் என்னும் ஏழுமாகும்.இவற்றுட் புட்கலாவர்த்தம் பொன்மழை பொழிதலாற்சிறந்ததென்பர்; மைக்கு லத்தினிற் புட்கலாவர்த்தமா மெனவே (வி. பா.குருகுலச். 28);புட்கலா வருத்தமாதி (திருவிளை. 14 ; 41)