பக்கம் எண் :

29

28. நாலெண்டேவர் : நால்வே றியற்கைப்பதினொரு மூவர்'' (முருகு. 167)

28 - 30. உரை. நின்தொன்மையும்....... வேற்றுமையின்று : ''வல்லார்க்கும்மாட்டார்க்கும் ஒப்பப் புகழ்ந்து முடிய ஒண்ணாமையின்மாயோனன்ன வென்றார். (புறநா.57 : 1 - 3 உரை)

31. உரை. கூந்தன்மா : கூந்தன்மாகொன்று குடமாடிக் கோவலனாய் (முத்தொள்ளாயிரம்).உரை. 31 2. மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை;வாய்பகுத்திட்டு (கலித். 103); கூந்தல்வாய் கீண்டானை (இயற்பா. 2ஆம் திரு. 93)

33. அச்சு - அச்சம்; கடைக்குறை: பதிற்.90 : 2; அச்சாறாக (கலித். 75 : 20)

33 - 4. (மேற்.) சினையிற்கூறும்முதலறி கிளவியாவது.....நகையச்சாக நல்ல மிர்துகலந்தநடுநிலை திறம்பிய நயமிலொருகையென்பது மது (தொல்.வேற்றுமை மயங்கு. சூ. 30 தெய்வச்.)

37. அறுகை நெடுவேளென்றது தத்தாத்திரேயரைநினைந்து கூறியது போலும்.

38. எழுகையாள: அக்கினிக்கு ஏழுகையுண்டென்பராதலின்அக்கினி வடிவுடையனென்பது கருதிக் கூறப்பட்டதுபோலும். எண்கையேந்தல்: இது பிரமனை நினைந்து கூறியதுபோலும்; தாமரைப் பூவினுட் பிறந்தோனுந்தாதையும் நீ (13 - 4)

39. (மேற்.) தொல்.குற்றிய. 54 இளம் ந.

40. மதவலி - மிக்க வலியை யுடையாய்;முருகு. 232.

43. ஆறறிகடவுள் - ஆறு வேதங்களாலும்அறியப்படும் கடவுளே.

36 - 43. உரை.தனக்கோர் வடிவுஇலான்: 4 : 56. 44. ஆம்பல் : 2 ; 13 குறிப்புரை.

52 - 3. மதியுண்டி அமரர் : அருந்தவானவர்க் காரமுதன்புட னளிப்போன் (வி. பா.குருகுல. 2); வழியது பக்கத்தமரருண்டி மதி (11 : 35- 6); உம்ப ருண்ணவுண்ணத் தொலையாத வாரமுதே (மதுரைக்கோவை232)

54 - 6. உரை.அணுத்திணிந்தநிலவுலகம்: ''அணுச்செறிந்த நிலம்'' (புறநா. 2 : 1உரை)

57 - 8. நினக்கு மாற்றோ ரும்மிலர்கேளிரு மிலர் (4 : 53 - 4)

59. சேடனுக்கு ஆயிரம் தலை : 1 : 1 : குறிப்புரை.

64 கல்லினுள் மணி : நான்மணிக்.5; சீவக. 4.

76. ஏமத்தை - காக்குந் தொழிலையுடையாய்.

77. உரை.இங்கே கூறப்பட்டுள்ளதத்துவ முறைகளை இவ்வாசிரியரே எழுதிய குறள்27-இன் விசேடவுரையாலும் நன்கு உணரலாகும்.

78. உரை. பாரிடை யைந்தாய்ப்பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய்போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய்போற்றி வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய்போற்றி வெளியிடை யொன்றாய் விளைந்தாய்போற்றி (திருவா. போற்றித்.); தே; திருச்சந்த.1.