பக்கம் எண் :

3

எரிமலர் சினைஇய கண்ணை பூவை
விரிமலர் புரையு மேனியை மேனித்
திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பிற்
றெரிமணி பிறங்கும் பூணினை மால்வரை
10எரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை
சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து
மேவலுட் பணிந்தமை கூறும்
நாவ லந்தண ரருமறைப் பொருளே;
(இது கொச்சகம்)

1இணைபிரி யணிதுணி பிணிமணியெரிபுரை விடரிடுசுடாபடா
15பொலம்புனைவினைமலா தெரிதிர டெரியுருள் கனமிகு முரண்மிகு
கடறருமணியொடு முததியாததநொணி நெறிசெறி வெறியுறு
முறலவி றலணஙகணஙகுவிாறறாரணி துணிமணி வெயிலுற
ழெழிலபுகழலாமலாமார்பின னெரிவயிரநுதிநுதி யெறிபடைய
ருததுமலையிவாநவை யினிறறுணிபடலினமணி
20யியலெறுமெழிலினிசை யிருளகல முறுகிறுகுபுரியொருபுரி
நாணமலாமலரிலகினவளாபருதியினொளிரமணிமாரபணிமண மிக
நாறுருவின விரைவளிமிகுகடுவிசையுடுவுறுதலைநிரை யிதழணி
யிறிரியவமாரைபபொரெழுநதுடனறிரைததுரைஇயதானவாசிர
முமிழபுனலபொழி பிழிநதுரமுதிரபதிரபலநதொடாவ மாவெனற
25கணை. (இவை நான்கும் அராகம்)
பொருவே மென்றவர் மதந்தபக் கடந்து
செருமேம் பட்ட செயிர்தீ ரண்ணல்
இருவர் தாதை யிலங்குபூண் மாஅல்
தெருள நின்வர வறிதல்
30மருளறு தேர்ச்சி முனைவர்க்கு மரிதே;

(இஃது ஆசிரியம்)


1 பிரதியுதவியும்உரையுதவியும் இல்லாமையால், அடிவரையறையும் பொருள்வரையுறையுஞ்செய்து இந்த அராகங்கள் நான்கினையும் ஒழுங்குபடுத்தஇயலவில்லை; இங்ஙனமே மூலத்திலும் உரையிலும் சிலசில பின்னும் உள்ளன.

(பி - ம்.)6 ''அரிமலர்'' 9''விளங்கும் பூணை'' 11 ''னிறுத்த'' 26 ''பொருவ'' 27 ''செருவிடம்படுத்த''28 ''மாஅன்''