77 - 8. உரை. பூரணப் பொருள்: இதுபற்றிமதுரைச் செந்தமிழ்ப் பத்திராசிரியரவர்களாகியஸ்ரீமத். திரு. நாராயணையங்காரவர்கள் எழுதியனுப்பியதுவருமாறு:-
வடமொழியில் எண்ணுப் பெயர்களில்சங்கியாவாசகமென்றும் சங்கியா பூரணவாசகமென்றும்இரண்டுவகையுண்டு. அவற்றுள் சங்கியா பூரண வாசகங்களுக்குரியஇலக்கணம் (பாணிநீயம்) அஷ்டாத்யாயியில் ஐந்தாவதுஅத்தியாயம் இரண்டாவது பாதம் 48-ஆவது சூத்திரம்முதற் சொல்லப்பட்டுள்ளது. இவ்வெண்ணுப் பெயர்கள்ஒருமைப் பெயர்களாயுள்ளன. தமிழிலக்கணங்களில்இரண்டு முதலிய எண்ணுப் பெயர்களெல்லாம் பன்மைப்பெயர்களென்று சொல்லப்பட்டன. பூரணப்பொருட்டாவது: இரண்டு முதலிய எண்ணுப்பெயர்கள் அவ்வெண்ணப்படும்பொருள்களின் சமுதாயத்தை உணர்த்திப் பன்மைப்பெயராகாது அவ்வெண்ணுப் பொருளை நிரப்பும் (பூரணஞ்செய்யும்)அவ்வெண்ணுவரிசையின் இறுதிப்பொருள் ஒன்றையேஉணர்த்துவது. இரண்டு முதலிய பெயர்கள் இரண்டாவது என்றற்றொடக்கமானபொருளுடையனவாக வந்து எண்ணுப் பொருளை நிரப்பி (பூரணஞ்செய்து)நிற்கும் பொருளை உணர்த்துமிடத்து அப்பொருள்பூரணப் பொருளெனப்படும்.
79. உரை. மான் - மகத்தத்துவம்:தொண்டு - ஒன்பது.
(மேற்.) 77 - 9. நன். 423 மயிலை.
80. உரை.தத்துவம் இருபத்தைந்து: அரிய தத்துவமையைந்தின் பேதமும் மரபி னாடினர்வாலுணர் வெய்திய திருவினாயகன் (கந்த. மேருப்.74)
81. திருச்சந்த விருத்தம் 44.
83. காவலன் - காத்தலில் வல்லவன்;காத்தற்கடவுளென்றபடி. உரை. கூத்தாடுதற்கு எடுத்த குடத்தினைஎடுத்தவன் : குடக் கூத்தென்பது திருமாலிற்குரிய கூத்துக்களுள்ஒன்று; அதற்குரிய உறுப்புக்கள் ஐந்து; குடத்தாடல்குன்றெடுத்தோனாடே லதனுக் கடைக்குவவைந்துறுப் பாய்ந்து; வாணன் பேரூர் மறுகிடைநடந்து நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப். 6 :54 - 5); அக்கூத்தாவது தலையிலே அடுக்குக் குடமிருக்கஇரண்டு தோள்களிலும் குடமிருக்க இரண்டு கைகளிலும்குடங்களை ஏந்தி ஆகாயத்திலே எறிந்து ஆடுவதென்பர்;குடங்களெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லவெங்கோவேகுடமாடீ குடமாடிய கூத்தனை குடமாடுதடமார்பர் (திவ்.)
84. நீயா நினைவ : நீயா - விட்டுநீங்காத; இறை. 43. உரை : குறுந். 36 : 3; ஐங்குறு.22 : 4.
87. உரை.வனமாலை -திருத்துழாய்; அணிகொண் டலர்ந்த வனமாலைசூடி (சூளா. அரசியற். 197)
88. பொலம்புரியாடை - பீதாம்பரம்.
91 - 4. உரை. நிறைந்த .....தோன்றாத: உருகெழு மாநிலமியற்றுவான்விரிதிரை நீக்குவான் (கலித். 106 : 18 - 9);வையகம் போர்த்த வயங்கொலி நீர் - கையகலக்கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே (பு. வெ.35) (3)