பக்கம் எண் :

31

நான்காம் பாடல்

திருமால்

திருமாலே! இந்திரியம் ஐந்தையும்மயக்கமற நீக்கி மைத்திரி கருணை முதிதை இகழ்ச்சியென்னும்நான்கினாலும் சித்தத்தைத் தூயதாக்கிச் சமாதிகூடியநின் அன்பர்கள் நின்னைத் தொழுதேத்திநின்புகழை விரித்தனர்; அப்புகழ்களெல்லாம் நினக்குஇயல்பாவனவன்றி வியக்கப்படுவன அல்ல; இதனை அறிந்தும்அத்தன்மையினரல்லாத யாங்கள் அவற்றுட் சிலவற்றைஇங்கும் அங்குமாகப் பிறழக் கூறுகின்றேம்; அது கண்டுநீ நகைத்தலும் தகுதியே; அதனால் யாம் கூறுவதை ஒழிவேமல்லேம்.

நின்னுடைய திருமேனி நீலமேனியையும்அலையடங்கிய கடலையும் நீர்நிறைந்த மேகத்தையும்ஒத்தது. அத்தகைய கரிய மேனியுடன் மாறுபட்ட பொன்னிறஆடையை உடையை நீ.

இயல்பாகவே சிவந்த கண்ணையுடையோய்!பிரகலாதன் நின்னைப் புகழ அவனை இரணியன் சினத்தால்பிணித்த காலத்தில் பிரகலாதனுடைய நெஞ்சிலே பொருந்தியநீ தூணிலிருந்து புறப்பட்டு அவ்விரணியனுடைய மார்பைவகிர்ந்த நகத்தையுடையை.

முன்பு பூமியானது வெள்ளத்தில் அழுந்தினகாலத்தில் வராகமாகிக் கழுத்தால் தாங்கி அதனைஅவ்வெள்ளத்தினின்று எடுத்த நின் செயல் மேருவின்தொழிலை ஒக்கும்.

நின் வெம்மையும் ஒளியும் சூரியனிடத்துக்காணப்படுகின்றன. நின் தண்மையும் மென்மையும்திங்களிடத்தும் நின் சுரத்தலும் வண்மையும்மாரியினிடத்தும் நீ தாங்குந்திறனும் பொறுமையும்பூமியினிடத்தும் நின்மணமும் ஒட்பமும் காயாம்பூவினிடத்தும்நின் தோற்றமும் பெருமையும் நீரினிடத்தும் நின்உருவமும் ஒலியும் ஆகாயத்தினிடத்தும்நின்வருகையும் ஒடுக்கமும் வாயுவினிடத்தும் காணப்படும்.ஆதலின் இவையும் உவையும் அவையும் பிறவுமாகிநின்னிடத்திலிருந்து தோன்றிக் காக்கப்பெற்றனவெல்லாம்பின்னும் நின்னோடே பொருந்தின.

கருடக்கொடியையுடையாய்! நின்னுடையகொடிகளாகப் பனை கலப்பை யானை என்பனவுளவேனும்அவை கருடக் கொடியைப்