பக்கம் எண் :

32

போலத் தனியே உயர்ந்தனவல்ல. அக்கருடன்பாம்பினது உடலையும் உயிரையும் உண்ணுவான். அவன் வயிற்றின்மேற்கட்டப்பட்டிருப்பதும் பாம்பு; அவனது தொடி கண்ணிகள்கழுத்துப்பூண் சூட்டு சிறகுகளின் மேலிருப்பன எல்லாம்பாம்பு. பகைவர் வலியைக் கெடுத்தோய்! கொடிமேல்இருந்த அவனது இரையும் பாம்பு.

கோபமும் அருளும் பட்சபாதமும்நடுவுநிலையும் ஆகிய இவற்றை மறமும் அறமும் உடையார்பால்முறையே உடையை; இல்லாரிடத்து இல்லாய்; இங்ஙனம்அன்றிப் பகைவருயிரை நீக்குதலும் நட்டோருயிரைப்பாதுகாத்தலுமாகிய தொழிலை உடையையல்லை; ஏனெனின்நினக்குப் பகைவரும் நட்டோரும் இல்லை. உயிர்களதுஇயல்பால் நினக்குப் பகையும் நட்பும் உளபோலத்தோன்றுவன அல்ல நின் இயல்பால் அவை இருப்பனவல்ல.

அன்பர்மனத்திற் கொண்டனவன்றிநினக்கென வேறு திருவுருவம் உடையையல்லை. நீலமணிபோன்றதிருமேனிக்கண் மணங்கமழும் துளவத்தால் தொடுத்தகண்ணியையுடையை. பொன்போலத் தோன்றும் ஸ்ரீவத்ஸத்தையுடையமார்ப! நின் திருவுந்தியில் தோன்றிய தாமரையைப்போன்றகண்களை உடையை; அளவிடுதற்கு அரியை.

வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்ததாளிணையை உடையை; நிறைந்த கடவுட்டன்மையை உடையை;இன்னும் பலவேறு இயல்புகள் நின்பால் உள; அவை நின்னையொத்தமுனிவர்கள் உணரும் உபநிடதத்தின் பொருள்; யாம்உணர்வனவல்ல.

ஆலமரமும் கடப்பமரமும் யாற்றிடைக்குறையும்குன்றும் பிறவுமாகிய இடங்களிற் பொருந்திய பலதெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பலவேறுதிருநாமங்களை உடையோய்! எங்கும் நீயே நிறைந்திருக்கின்றாய்.நின் அன்பர்கள் தொழுத கைகளின் தாழ்ச்சிக் கண்அகப்பட்டவனும் நீயே. அவரவர் செய்வனவற்றிற்குப்பாதுகாப்பாக இருப்பவனும் நீயே. அருள்புரிவாயாக.