பக்கம் எண் :

35

நின் சுரத்தலும் வண்மையு மாரியுள
நின் புரத்தலு நோன்மையு ஞாலத்துள
நின் நாற்றமு மொண்மையும் பூவையுள
30நின் தோற்றமு மகலமு நீரினுள
நின் உருவமு மொலியுமா காயத்துள
நின் வருதலு மொடுக்கமு மருத்தினுள
அதனால் இவ்வு முவ்வு மவ்வும் பிறவும்
ஏம மார்ந்தநிற் பிரிந்து
35மேவல் சான்றன வெல்லாம்
சேவலோங் குயர்கொடி யோயே
சேவலோங் குயர்கொடி
நின்னொன் றுயர்கொடி பனை

27. சுரத்தல் - கொடுக்கக் கொடுக்கப்பொருள் வளர்தல். வண்மை - கொடை.

28. புரத்தல் - தாங்குதல். நோன்மை- பொறை.

29. பூவை - பூவைப்பூ.

30. தோற்றம் - வெளிப்படுதல்.அகலம் - பெருமை.

நாராயணனென்னும் திருநாமம் நீரின்கட்காணப்படுதலாகிய இக்காரணம்பற்றி வந்தது.

31. உருவம் - ஞானக்கண்ணாற் காணப்படும்உருவம் ஒலி - சொல்; ஆகாயத்துளவென்றார் அதன் பண்பாகலின்.

32 வருதல் - அவதரித்தல் ஒடுக்கம்- மீண்டு சென்று அடங்குதல். மருத்து - காற்று

33-5. இவையும் உவையும் அவையும்பிறவுமாய் நின்கணின்று பிரிந்து நின்னால் ஏமமுற்றனவெல்லாம்பின்னும் நின்னொடு மேவலமைந்தன.

என்றது உலகுயிர்களின் தோற்றமும்நிலைபேறும் ஒடுக்கமும் நின்கண்ணவென்றவாறாம்.

இவையென்றது நணியவற்றை; உவை யென்றதுஅவற்றிற் சேயவற்றை; அவையென்றது அவற்றினும் சேயவற்றை;பிறவென்றது காணப்படாதவற்றை.

37-42. சேவலோங்கு உயர்கொடியையுடையநின்னுயர்கொடி ஒன்று பனை. இவ்வண்ணம் பலகொடியுளவேனும்நின் ஒன்றாக உயர்ந்த கொடியை அக்கொடிகள் ஒன்றுதலின்று;தன்...................ம் பாம்பின் விடத்தையும் உடலையும்உயிரையும் உண்ணும் உவண மாதலால்.

(பி - ம்.)34 ''நிற்பிரிந்த''