பக்கம் எண் :

36

நின்னொன் றுயர்கொடி நாஞ்சில்
40நின்னொன் றுயர்கொடி யானை
நின் ஒன்றா வுயர்கொடி யொன்றின்று
விடமுடை யரவினுட லுயிருருங் குவணம்
அவன் மடிமேல் வலந்தது பாம்பு
பாம்புதொடி பாம்பு முடிமேலன
45பாம்புபூண் பாம்பு தலைமேலது
பாம்புசிறை தலையன
பாம்பு படிமதஞ் சாய்த்தோய் பசும்பூணவை
கொடிமே லிருந்தவன் றாக்கிரை யதுபாம்பு
கடுநவை யணங்குங் கடுப்பு நல்கலும்
50கொடுமையுஞ் செம்மையும் வெம்மையுந் தண்மையும்
உள்வழி யுடையை யில்வழி யிலையே
போற்றா ருயிரினும் போற்றுந ருயிரினும்
மாற்றே மாற்ற லிலையே நினக்கு
மாற்றோ ரும்மிலர் கேளிரு மிலரெனும்

41. ஒன்றாதல் - முதலாதல்; ஒன்றுதல்- ஒத்தல்.

43. இன்னும் அது கடவுட்கொடியென்பதுதோன்ற''அவன் என உயர்திணையாற் கூறினார்; செய்யுளாகலிற்சுட்டுப்பெயர் முற்கூறப்பட்டது.

43. வயிற்றின்மேல் உதரபந்தமாய்வலந்தது.

படியை மடியகத் திட்டான்(நான்மணிக். கடவுள்.) என்புழியும் வயிறு மடியெனப்பட்டது.

44. முடிமேலன - கண்ணிகள்.

45. பூண் - கழுத்திற் பூண்பது. தலைமேலது- சூட்டு.

46. சிறகுகளின் தலையிடத்தன. விகாரத்தால்ஒற்றுக் குறைந்தது.

47. பகைவர் மதங்கெடுத்தோய்! பசும்பூணவை- பொன்னிறத்தவை.

48. தாக்கிரை - எறிந்தெடுக்கும்இரை.

இதனாற் கருடனுக்கு அறனுடைமையும்மறனுடைமையும் கூறப்பட்டன.

49 - 54. கடுநவையுண்டாக வருத்தும் வெகுளியும்அருளும் கோட்டமும் செப்பமுமாகிய இவை மறமும் அறமும்உடையாரிடத்து உடையையாய் இல்லாரிடத்து இல்லாயாயிருத்தலல்லதுமாற்றாருயிரின்கண்ணும் கேளிருயிரின் கண்ணும்அதனை மாற்றுதற்றொழிலும் அதற்கு ஏமஞ்செய்தற்றொழிலுமுடையையல்லை; நினக்கு மாற்றோரும் கேளிரும் இலராதலான்.

(பி - ம்.)41 ''ஒன்றுயர்கொடி'' 42''லுயிர் நுங்குவணம்''