பக்கம் எண் :

37

55வேற்றுமை யின்றது போற்றுநர்ப் பெறினே
மனக்கோ ணினக்கென வடிவுவே றிலையே
கோளிரு ளிருக்கை யாய்மணி மேனி
நக்கலர் துழாஅய் நாறிணர்க் கண்ணியை
பொன்னிற் றோன்றிய புனைமறு மார்ப
60நின்னிற் றோன்றிய நிரையிதழ்த் தாமரை
அன்ன நாட்டத் தளப்பரியவை
நின்னிற் சிறந்த நின்றா ளிணையவை
நின்னிற் சிறந்த நிறைகட வுளவை

என்றது குற்றமாகிய மறமுடையாரிடத்துவெகுளியும் கோட்டமும் உடையையாய் அஃது இல்லாரிடத்துஇல்லையாதலும் குணமாகிய அறமுடையாரிடத்து அருளும்செம்மையுமுடையையாய் அஃதில்லாரிடத்து இல்லையாதலுமல்லதுநினக்குப் பகையாயினாருயிரின்கண் அதனை மாற்றுதற்றொழிலும்நினக்குக் கேளிராயினாருயிரின்கண் அதற்கு ஏமஞ்செய்தற்றொழிலும்உடையையல்லை; அவ்விருதிறத்தாரும் நினக்கு இன்மையானென்றவாறு.

55. இவ்வாற்றான் இருதிறத்தாரும்நினக்கு இலரென்றாலும் முன் ''உள்வழி யுடையை இல்வழியிலை''(51) என்ற அதனொடு வேறுபாடின்று அஃது உணர்வாரைப்பெறின்.

என்றது உயிர்களது இயல்பான் நினக்குப்பகையும் நட்பும் உளபோலத் தோன்றுவதல்லது நின்இயல்பான் அவை உளவல்ல வென்றவாறாம்.

56. அன்பர் மனத்திற் கொண்டனவன்றிநினக்கென வேறு வடிவு உடையை யல்லை.

57-8. கண்ணைக் கொள்ளுதலையுடையஇருட்கு இடமாய நீலமணிபோலும் மேனிக்கட்பிணிவிட்டலர்ந்த துழாயது நாறிணராற்றொடுத்த கண்ணியையுடையை.

59. நிறத்தாற் பொன்போலத்தோன்றிய புகழப்படும் மறுவையுடைய மார்பை!

திருமகளாதலால் ''புனைமறு'' என்றார்.

60-61. நின் உந்தியிற்றோன்றியதாமரைபோலும் நாட்டத்தையுடையையாய் அளத்தற்கரியை.

62. வீடளிக்குங்கால் நின்னினுஞ்சிறந்த நின் தாளிணையையுடையை.

63. நின்கட்சிறந்த நிறைந்தகடவுட்டன்மையையுடையை.

61-3. அகரங்கள் இசைநிறையும் இடைச்சொல்.

(பி - ம்.)55 ''போற்றினர்''