| அன்னோ ரல்லா வேறு முளவவை | | 65 | நின்னோ ரன்னோ ரந்தண ரருமறை அழல்புரை குழைகொழு நிழறரும் பலசினை ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் | | 70 | எவ்வயி னோயு நீயேநின் னார்வலர் தொழுதகை யமைதியி னமர்ந்தோயு நீயே அவரவ ரேவ லாளனு நீயே அவரவர் செய்பொருட் 1கரணமு நீயே. கடவுள் வாழ்த்து. கடுவனிள வெயினனார் பாட்டு. பெட்டனாகனார் இசை. பண்ணுப் பாலையாழ். |
64 - 5. அத்தன்மையவல்லாத இயல்புகள்நினக்கு வேறுமுள; அவை நின்னையொத்த தெய்வமுனிகள்உணரும் உபநிடப்பொருள்; யாம் உணர்வனவல்லவென்றவாறு. 65. ''அன்ன'' எனற்பாலது ''அன்'' எனக் குறைந்துநின்றது.''ஓர்'' இரண்டும் அசைநிலை. அருமறை : ஆகுபெயர். 66 - 70. அழல்புரை குழையையும் நிழலைத்தரும் சினையையுமுடைய ஆலும் கடம்பும் யாற்றிடைக்குறையும்குன்றும் பிறவுமாகிய அவ்விடங்களைப் பொருந்தியபலதெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பெயரையுடையோய்! 68. காற்றும் வழங்காத திணிந்த நிலைமையையுடையகுன்றமென்க. 70 - 71. நின் அன்பர் தொழுத கையினதுதாழ்ச்சிக்கண் அகப்பட்டோயும் நீ. 72. நினைத்தன முடித்தலான் அவரவர்ஏவல் செய்வானும் நீ. 73. அவரவர் செய்த பொருள்கட்குக்காவலும் நீ. செய்பொருளாவன: அறம் பொருள்இன்பம் வீடென்பன. 70 - 73. ஏகாரம் நான்கும் ஈற்றசை. 1 திருச்சந்தவிருத்தம்69-ஆவதில் வரந்தர மிடுக்கிலாத தேவரை யாணமென்றடைந்து வாழு மாதர்காள் என்புழிக் காவலென்னும்பொருளில் ஆணமென்பது எதுகையில் வந்திருத்தலால்இங்கே ''ஆணமு நீயே'' என்று பாடங்கொள்ளுதலும் பொருந்தும். |