குறிப்புரை
6. (மேற்.) ''அவிதல் - குறைதல்'' (சீவக.189 ந.)
6 - 7. உரை.அடுத்து வரலுவமை : சீவக.107 ந.திருமணி புரையுமெய் : 1 : 59 குறிப்புரை.மழையிருஞ்சூல்......கொள்க : உள்ளூர் - ஊர் நடு;முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை......இவ்வுரையாசிரியர்வடநூன் மரபும் வடநூலை மொழிபெயர்த்துச் செய்த வீரசோழியம்முதலிய பின்னூலும் கண்டு இவ்வாறுரைத்தார்போலுமென்க; பரிபாட்டினுள்''மழையிருஞ்சூல்'' என்பதனைமுன் பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத்தொகையென்றார்இவ்வுரையாசிரியர். ஆகையால் அவர் கருத்து எம்மனோர்க்குஅறிதலரிதென்க (திருக்குறள் நுண்பொருள்மாலை216)
8. மாஅமெய் - கரியமேனி.
18. படி ; ''படியோரென்பது பிரதியோரென்னும்வடமொழித் திரிவு'' (அகநா.22 : 5 உரை); ''படிச்சந்தமென்பதுபிரதிச்சந்தமென்பதன் வடமொழிச் சிதைவு (திருச்சிற்.78 பேர்.) என்பவற்றால் இச்சொல் பிரதியென்பதன்சிதைவென்று தெரிகின்றது. உரை. படி : படிமதஞ்சாய்த்தோய் (47)
19. இடி முரசு : 22 : 4. 26. சாயல் - அருள் ;2 : 56 உரை.
25-6. ஞாயிறும் திங்களும் உவமை :ஈண்டுநீர் மிசைத்தோன்றி யிருள்சீக்குஞ்சுடரேபோல் வேண்டாதார் நெஞ்சுட்க வெருவந்த கொடுமையும்நீண்டுதோன் றுயர்குடை நிழலெனச் சேர்ந்தார்க்குக்காண்டகு மதியென்னக் கதிர்விடு தண்மையும் (கலித்.100) ; புறநா.55; 13 - 6 59 : 6 - 7.
27. வண்மைக்கு மாரி : புறநா.54 -6 அடிக்.
28. நோன்மைக்கு ஞாலம் : 2 : 55 குறிப்புரை.
29. பூவை நிலை யென்னும் துறை ஈண்டுஅறியற்பாலது.
30. நீரின் அகலம் : நீரினுமாரள வின்றே (குறுந். 3 ; 2): நன்மை கடலிற்பெரிது (குறள் 103).
30. உரை திருமாலுடைய உருவம் நீரென்பதுஒரு சாரார் கொள்கை; தானொரு கூறு சலமயனாமே (திருமந்திரம். பாயிரம்);புனலன் மாய னுதகத் திருவுடம்பு (தக்க.710-11).
34. ஏமம் - இன்பம்.
33 - 5. உரை. ''இவை'' முதலியவற்றைஇங்கே இவர் விளக்கினது போலவே ''செய்குன் றுவையிவைசீர்மலர் வாவி விசும்பியங்கி நைகின்ற திங்களெய்ப்பாறும் பொழிலவை (திருச்சிற். 223) என்பதனுரையில்'இவையென்பது தன் முன்னுள்ளவற்றை; உவையென்பது முன்னின்றவற்றிற்சிறிது சேயவற்றை; அவையென்பது அவற்றினும் சேயவற்றை''என்று பேராசிரியரும்விளக்கியுள்ளார்; அஅவனும்இஇவனும் உஉவனுங் கூடியக்கால் எஎவனை