பக்கம் எண் :

4

30
அன்ன மரபி னனையோய் நின்னை
இன்னனென் றுரைத்த லெமக்கெவ னெளிது;
(இது பேரெண்)

அருமைநற் கறியினு மார்வ நின்வயிற்
பெருமையின் வல்லா யாமிவண் மொழிபவை
35மெல்லிய வெனாஅ வெறாஅ தல்லியந்
திருமறு மார்பநீ யருளல் வேண்டும்;
(இஃது ஆசிரியம்)

விறன்மிகு விழுச்சீ ரந்தணர் காக்கும்
அறனு மார்வலர்க் களியு நீ
திறனிலோர்த் திருத்திய தீதுதீர் சிறப்பின்
40மறனு மாற்றலர்க் கணங்கு நீ
அங்கணேர் வானத் தணிநிலாத் திகழ்தரும்
திங்களுந் தெறுகதிர்க் கனலியு நீ
ஐந்தலை உயிரிய வணங்குடை யருந்திறல்
மைந்துடை யொருவனு மடங்கலு நீ
45நலமுழு தளைஇய புகரறு காட்சிப்
புலமும் பூவனு நாற்றமு நீ

பரிமேலழகருரை

1 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .வாறு.

43-6. ஐந்து தலையைத் தோன்றுவித்தஅணங்குடை அருந்திறலையுடைய. . .வீசன். மடங்கல் - அவனினாகிய உலகுயிர்களினது ஒடுக்கம்.

45-6. அறமுழுதினை . . . ய பூவினான்முகனும்அவனினாகிய உலகுயிர்களின் தோற்றமும் நீ.

வேதமென்னும் வடமொழித் . . . ளுணர்வென்பாதகலான் ஈண்டு அப்பொருள்பற்றி அதற்குப் புலமென்று பெயராயது .பி . .நடாத்துகின்ற நான்முகற்குப் பெயராயிற்று.

அழிப்பும் படைப்பும் கூறியவாறு.

1 மிகச் சிதைந்திருப்பினும், ஆயிரம் விரித்த என்னும் செய்யுளை இந்நூலின் முதற்செய்யுளென்று நன்கு அறிந்து கொள்ளும்படி பேருதவியைச் செய்த இந்த உரைப்பிரதிதிருவாவடுதுறை யாதீனத்துப் புத்தகசாலையிலிருந்துகிடைத்தது.

(பி - ம்.)32 ''ணெளிது'' 38 ''கருளுநீ'' 39 ''தீதுதீர்கொள்கை, 43 ''ஐந்தனையுயிரிய'' 46 ''புலனும் பூவினு ணாற்றமுநீ''