பக்கம் எண் :

40

வெல்லா ரிகல் (யா. வி. 7 மேற்.); இங்கிவரிங்கிவரங்கவ ரங்கவ ருங்கவ ருங்குவரே இந்நிரையிந்நிரை யந்நிரை யந்நிரை யுந்நிரையுந்நிரையே (திருவால. 39 : 25 - 6)

36. சேவலோங்குயர்கொடி : 1 : 11 குறிப்புரை.

40. பணைமிசை யெழில்வேழ மேந்திய.....ஒருவனை(பரி. 1 : 4 - 5)

38 - 40. பலதேவர் கொடிகள்: 1 : 4 - 5;18-ஆம் அடி.

37 - 42. உரை. ஒன்றாக.......ஒன்றுதலின்று:கலிங்கத்.18; தக்க 4 உரை.

43. உரை. செய்யுளில் சுட்டுப்பெயர்முன்னால் வரலாம் : தொல். கிளவி. 39.

49. கடு நவை - கடிய குற்றம்; கலித்.12.

50. செம்மை - நடுநிலை. 54. படிமதம் : 3: 57 - 8.

53. ஏமாற்றல் - ஏமமாற்றல்.

49 - 54. உரை. அவ்விரு திறத்தாரும்நினக்கு இன்மையான் வேண்டுதல் வேண்டாமையிலான் (குறள் 4).

56. உரை. பரி. 3 : 36 - 43 உரை; பேசுவாரெவ்வளவு பேசுவாரவ்வளவே வாச மலர்த்துழாய் மாலையான்- தேசுடைய - சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்பொங்கரவ வக்கரனைக் கொன்றான் வடிவு (திவ்.மூன்றாந் திருவந்தாதி 21)

58. கமழ்குரற் றுழாஅய் அலங்கற்செல்வன்(பதிற். 31)

59. உரை. திருவாகிய மறு : பரி. 1: 36 குறிப்புரை; பெரும்பாண்.29 ந.

60 - 61. உந்தித்தாமரை கண்ணுக்கு : 15: 49.

65. அந்தணரருமறை : 1 : 13 குறிப்புரை;2 : 57; இறை. சூ. 1.

உரை. ஓர் : அசைநிலை; ''தன்னோரன்னோர்க்குத் தான்பயப்படுதலும் (ஆத்திரையன்பேராசிரியன் பொதுப்பாயிரம்)

70. எவ்வயினோயும் நீயே என்றது''விஷ்ணு'' என்னும் சொற்பொருளை விளக்கியது.

66 - 70. உரை.ஆல் முதலியன தெய்வத்தன்மைவாய்ந்தவை; துறையு மாலமுந் தொல்வலி மராஅமும்முறையுளி பராஅய் ஆலுங் கடம்பு மணிமார்(கலித். 101 106); கடவுளாலத்து (நற். 343;புறநா. 196); புதுப்பூங்கடம்பும் (முருகு. 225)

73. திருச்சந்த விருத்தம்69-இல் வரந்தர மிடுக்கிலாத தேவரை யாண மென்றடைந்துவாழு மாதர்காள் என்புழிக் காவல் என்னும் பொருளில்ஆணமென்பது எதுகையில் வந்திருத்தலால் இங்கு'' ''பொருட்குஅரணமும் நீயே'' என்பதை ''ஆணமும் நீயே என்றும் பாடங்கொள்ளலாம்.(4)