ஐந்தாம் பாடல்
செவ்வேள்
பிணிமுகமென்னும் யானையின் மேல்எழுந்தருளி வேலாயுதத்தால் சூரபன்மனாகிய மாமரத்தைத்தடிந்து கிரவுஞ்ச மலையை ஊடறுத்தோய்! ஆறு திருமுடியைஉடையோய்!
நீ ஆறுதலையுடனும் பன்னிரண்டு தோளுடனும்சூரியனது எழுச்சி போன்ற நிற அழகுடனும் தாமரைப்பூவின்கண்தோன்றிய தோற்றத்தை உடையை. ''சங்காரக்கடவுளுக்குமகனே! செவ்வேளே! சால்பினையுடையாய்! தலைவனே!'' என்றுவெறியாட்டில் வேலனாகிய படிமத்தான் ஏத்தும் வெறிப்பாட்டும்உள; இவ்வுலகிற்கெல்லாம் நீயே தலைவனாதலின் அவ்விடத்துஅவன் கண்டு ஏத்துகின்ற அப்பாட்டுக்கள் மெய்யல்ல;ஆயினும் அங்கே நீ வெளிப்படுதலால் அவை பொய்யுமல்ல;அவன் ஏத்துவனவற்றுள் ஒன்றாகியவழி தலைமைச் சிறப்பினையுடையநீ அச்சிறப்பின்றி நிற்பாய்; ஆயினும் நல்வினையாற்சிறப்புடைய உயர்பிறப்பினராதலும் தீவினையால்இழிபிறப்பினராதலுமாகிய இது நின்னாணைக்கண்ணது;ஆதலின் அச்சிறப்பு நினக்கு ஒருகாலும் ஒழியாது.
நான்முகனாகிய பாகன் செலுத்த வேதக்குதிரைகளைப்பூட்டிய பூமியாகிய தேரையூர்ந்து நாகம் நாணாகவும்மலை வில்லாகவும் கொண்டு திரிபுரங்களை ஓர் அழலம்பினால்அழியும்படி: எய்தவனும் அமரர்களுடைய வேள்விப்பாகம்உண்டவனும் பசிய கண்ணையுடையவனுமாகிய இறைவன் உமாதேவியாரோடுஇன்புறுகையில் உண்டான கருவை இந்திரனுடைய வேண்டுகோளுக்குஇணங்கிப் பலவாகச் சேதித்தருளினான். அக்கருவைமுனிவர்கள் எழுவரும் பெற்றுத் தீயை மூட்டி அதன்கண்அவியோடு பெய்தனர். பின்னர் அதனை அருந்ததி யொழிந்தஏனையவராகிய கார்த்திகைமாதர் அறுவரும் உண்டுகருப்பங்கொண்டு சரவணப் பொய்கையில் தாமரைப்பூவாகியபாயற்கண்ணே நின்னைப் பெற்றாரென்பர்.
முருகா! அவ்வாறு நின்னைப்பெற்றஅன்றே இந்திரன் இகல் மிகுதியால் நின்மேல் தனதுவச்சிராயுதங்கொண்டு எறிய ஆறு வேறு உருவமாகிப்பின்னும் ஒருவனாயினை.
குழவிப்பருவத்தில் முற்ற வளராததிருமேனியினையுடைய நீ விளையாட்டாகச் செய்தபோரில் படைக்கலமில்லாத நின்கைக்கு