| தீயழ றுவைப்பத் திரியவிட் டெறிந்து நோயுடை நுடங்குசூர் மாமுத றடிந்து | | 5 | வென்றியின் மக்களு ளொருமையொடு பெயரிய கொன்றுண லஞ்சாக் கொடுவினைக் கொஃறகை மாய வவுணர் மருங்கறத் தபுத்தவேல் |
3-4. தீயின்கொழுந்து ஒலிப்பத்திரித்துவிட்டெறியப்பட்டு அச்சத்தையுடையன் ஆதலால்நடுங்குகின்ற சூர்மாவினது முதலையறுத்து. திரித்தென்பது திரியவெனத்திரிந்துநின்றது. விட்டெறிந்தெனச் செயப்படுபொருள்வினைமுதல் போலக் கூறப்பட்டது. மாவென்னும் பெயரொப்புமைபற்றி ''முதறடிந்து''என்றார். 5 - 7. வென்றியுடைமையாற் புண்ணியசனம்பாவசனமென்று இருகூறாய மக்களுட் புண்ணியசனமென ஒருகூற்றாற் பெயர்பெற்ற அவுணர். அஃது அவர்க்குப் பெயர்மாத்திரமேயென்றற்குக் கொன்றுணலான் வரும் பாவத்திற்கு அஞ்சாதவென்றார். தீவினையினையும் கொல்லப்படும்தகைமையினையுமுடைய மாயத்தை வல்ல அவுணரென்க. அவரைக் கிளையறக் கொன்ற வேலால். விட்டெறிந்து (3) தடிந்து (4)தபுத்தவேல் (7) என்க. உணர்ந்து அவன் பக்கனின்றும்வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலேஇறைவன் கூறாகிய முத்தீக்கட்பெய்து அதனைத் தம்மனைவியர் கையிற் கொடுப்ப அருந்ததி யொழிந்தஅறுவரும் வாங்கிக்கொண்டு விழுங்கிச் சூன் முதிர்ந்துசரவணப் பொய்கையிற் பதுமப்பாயலிலே பயந்தாராகஆறு கூறாகி வளர்கின்ற காலத்து இந்திரன் தான்இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டுவந்துவச்சிரத்தான் எறிய அவ்ஆறுவடிவு மொன்றாய் அவனுடனேபொருது அவனைக் கெடுத்துப் பின்சூரபன்மாவைக் கொல்லுதற்குஅவ்வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்றதென்றுபுராணம் கூறிற்று. இதனை ''பாயிரும் பனிக்கடல்'' என்னும்பரிபாடற் பாட்டானுணர்க என்பதும் அங்ஙனம்அங்கியின்கண் இட்டுச் சத்தி குறைந்த கருப்பத்தைமுனிவரெழுவரும் வாங்கித் தம் மனைவியர்க்குக் கொடுப்பஅருந்ததியொழிந்தோர் விழுங்கிச் சூன்முதிர்ந்துசரவணப்பொய்கையிற் பதுமப்பாயிலிலே பெற ஆறு வடிவாகவளர்ந்தமை கூறிற்று........இது பரிபாடலிற் ''பாயிரும்பனிக்கடல்'' என்னும் பாட்டானுணர்க என்பதும்திருமுருகாற்றுப் படையில் 58 255-ஆம் அடிகளின்விசேடவுரை; ந. (பி - ம்.)4 ''நுணங்குசூர்'' 6 ''கொதிவினை''7 ''வல்லவுணர்'' |