| நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து | | 10 | மாலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள | | 15 | வேல னேத்தும் வெறியு முளவே அவை வாயு மல்ல பொய்யு மல்ல நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற் சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை |
8 - 10. நாவலந்தீவினுள் வடகூற்றிற்கௌஞ்சமென்னும் மால்வரையைத் துளைத்து அதனை வழிப்படுத்தினஆறு மென்றலையினையுடையாய்! ஈண்டுக் குருகென்றது அன்றிலை. அதற்குவடமொழிப் பெயர் அதுவாதலின் ''குருகொடு பெயர்பெற்றமால்வரை'' என்றார். வழிப்படுத்துதல் - வழிக்கண்நிகழும் இயக்கத்தை அதன்கண் நிகழ்வித்தல். குழவிப்பருவத்து இவ்வீரமெல்லாம் செய்தாயென்னும்கருத்தால் ''கயந்தலை'' என்றார். ஊர்ந்து (2) புக்கு (1) உழக்கி (2)உடைத்து (9) ஆற்றுப்படுத்த (10) வெனக் கூட்டுக. 10. கயந்தலையென்பது பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; அஃது ஈண்டு ஆகுபெயராய்அண்மைவிளி ஏற்று நின்றது. 11-2. மூவிரு கயந்தலையுடனும் முந்நான்குமுழவுத்தோளுடனும் ஞாயிற்றின் எழுச்சிபோலும் நிறவழகுடனும்தாமரைப்பூவின்கட் பிறந்த பிறப்பையுடையை. 13. உலகத்தை அழிக்கும் கடவுட்கு மகனே! 14. சால்வ - சால்பினையுடையாய்! 14-5. நீ வெளிப்படுதலிற் கண்டார்க்குஅச்சம் செய்யும் வெறியாட்டு விழவினுள் வேலன்கண்டுஇவ்வாறு சொல்லி ஏத்தும் வெறிப்பாட்டும் உள. 15. வெறி : ஈண்டு ஆகுபெயர். 16-21. இவ்வுலகிற்கெல்லாம் தலைவன்நீயேயாகலான் அவ்விடத்து அவன்கண்டு ஏத்துகின்றஅப்பாட்டுக்கள் மெய்யுமல்ல; (பி - ம்.)9 ''யுடைத்தம்மலை'' 12''நிறத்ததை'' 17 ''வரம்பிற் றுலக'' |