| சிறப்பினு ளுயர்பாகலும | | 20 | பிறப்பினு ளிழிபாகலும் ஏனோர்நின் வலத்தினதே ஆதி யந்தண னறிந்துபரி கொளுவ வேத மாபூண் வையத்தே ரூர்ந்து நாக நாணா மலைவில் லாக | | 25 | மூவகை ஆரெயி லோரழ லம்பின் முளிய மாதிர மழலவெய் தமரர் வேள்விப் பாக முண்ட பைங்கட் பார்ப்பான் |
ஆயினும் நீ வெளிப்படுதலான் அவைபொய்யுமல்ல; அவற்றுள் ஒன்றாயவழி அத்தலைமைச்சிறப்பினையுடைய நீ அச்சிறப்பின்றி ஒழிகுவை;நின்னை யொழிந்தார் நல்வினையாற் சிறப்புடையஉயர் பிறப்பினராதலும் தீவினையால் இழிபிறப்பினராதலுமாகியஇது நின்னாணைக்கண்ணது; ஆதலின் அச்சிறப்பு நினக்குஒருகாலும் ஒழியாது; அதனால் அவற்றுள் ஒன்றாகாது. 22-54. நான்முகனாகிய பாகன் கொளுவுமாறறிந்துசெலவினைக் கொளுவ வேதங்களாகிய குதிரை பூண்ட பூமியாகியதேரையேறி வாசுகி நாணாக இமயம் வில்லாக வெள்ளிபொன் இரும்பென்னும் மூவகையையுமுடைய அரிய மதில்கள்ஒரு தீயாகிய அம்பாலே வேவ அவற்றைத் திசைகள் வெதும்பஎய்து அமரர்க்குச் செய்யும் வேள்விக் கண் அவிப்பாகத்தையுண்டகோபத்தாற் பசிய கண்ணையுடைய ஈசன் உமையோடுபுணர்ந்து காமத்தை நுகர்கின்ற வதுவை நாளின்கண்அமையாத புணர்ச்சியை ஒருகாலத்து அமைந்தானாக நெற்றிக்கண்இமையா நாட்டத்தையுடைய அவன் பக்கலிலே இந்திரன்ஒரு வரத்தைக் கொண்டு ''இந்தப்புணர்ச்சியாற்றோன்றிய கருவை அழிப்பாயாக'' எனமழுப்படையைத் தரித்தவன் வாய்மையனாதலின் அவ்விந்திரனுக்குத்தான் கொடுத்த வரத்தைச் செய்தற்கு அரிதெனமாற்றாதே இவ்வுலகேழும் தன் மெய்ம்மையை வியக்கஅதனுருவைப் பலகண்டமாகச் சேதித்தான்; அங்ஙனம் சேதித்தலாற்கழிந்த சேயாக்கையாதற்கு உரியகருவை ''இஃது அமரர்சேனைக்குத் தலைவனாம்'' எனச்சமாதி யானுணர்ந்து(?)இந்திரனுக்கிரதம் வாராமைகூறி அவன் பக்கலிலேபெற்றுக்கொண்டு (பி-ம் ஏற்றுக்கொண்டு) போன தெய்வமுனிவர்கள் எழுவரும் இறைவன் கண்டமாக வசித்ததாகியவசிதடியை நம் மனைவியர் தரித்துச் சமைவிப்பாராயின்நிறைவயிற்சாலார்; அதனால் அங்கியாகிய தானே தரிக்கவெனவெண்ணி அம்மாதவர் அழலைவேட்டு அதன்கண் அவியுடனேபெய்தார்; பெய்ய அவ்வவியோடு குண்டங்களில்நிமிர்ந்த (பி - ம்.)19 ''ளுயர்வா'' 20''ளிழிவா'' 22 ''பரிக்கொளுவ'' |