| வலனுய ரெழிலியு மாக விசும்பும் நிலனு நீடிய விமயமு நீ;(இவை ஆறும் பேரெண்) அதனால், (இது தனிச் சொல்) | 50 | இன்னோ ரனையை யினையை யாலென அன்னோர் யாமிவட் காணா மையிற் பொன்னணி நேமி வலங்கொண் டேந்திய மன்னுயிர் முதல்வனை யாதலின் நின்னோ ரனையைநின் புகழொடும் பொலிந்தே;(இது சுரிதகம்) | 55 | நின்னொக்கும் புகழ்நிழலவை பொன்னொக்கு முடையவை புள்ளின் கொடியவை புரிவளை யினவை எள்ளுநர்க் கடந்தட்ட விகனே மியவை மண்ணுறு மணிபா யுருவினவை | 60 | எண்ணிறந்த புகழவை யெழின் மார்பினவை(இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்) ஆங்கு,(இது தனிச்சொல்) காமரு சுற்றமோ டொருங்குநின் னடியுறை யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் | 65 | வாய்மொழிப் புலவநின் றாணிழ றொழுதே.
இது கடவுள் வாழ்த்து. |
(இது சுரிதகம்)
47. . . . . . . ெ. . . யங்கு மாகமாகிய விசும்பும். மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடுவ . . . . . 50. . . . .யாய்இவரையனையை யென்றற்கு. 52. வலப்பக்கத்துக்கொண்டு முத. . . . 54. . . . யையென்புழி. . . பத . . ணுதலுற்ற நீயே. 59. மணிபரந்தாலொத்தஉருவினையுடையை. இம்மு . . .செ. . .ச. . . 62. . . .ரென்புழிஉகரம் பகுதிப்பொருள் விகுதி. 62-5. யாம் ஏமுற்றநெஞ்சத்தேமாய் இம்மைக்கட் காமரு சுற்ற மோடொருங்கு.. . .தலைப்பொருந்தியும் பொலிகவென நின் தாணிழல்தொழுது வைகலும் பரவுதும், வாய்மொழிப் . . . பரிபாட்டென்பதுஇசைப்பாவாதலான், இஃது இசைப்பகுப்புப் படைத்தபுலவரும் பண்ணுமிட்டெ. . . . (பி - ம்.) 65. ''முதல்வநின்'' |