1குறிப்புரை
1. ஆயிரம் . . . . .தலை : 3 : 59, 13 : 27 - 8, தி. 1 : 79.
1-2. (மேற்கோள்):''வெண்டளையும் ஆசிரியத்தளையும் விராய்த்துள்ளலோசை படவும் கூறப்படுதலின் பரிபாடல் ; இதுபாவென்னும் இயனெறியின்றிப் பொதுவாய் நிற்றற்கும்உரியது'' (தொல். செய்.119, பேர். ந,)
3. மாயுடை - மாவைஉடைய ; மா - திருமகள்.
4. பணைமிசை - மூங்கில்முளையை உண்ணுகின்ற ; வேழத்திற்கு அடை.
5. வளைநாஞ்சில் ஒருகுழையொருவன் : 15 ; 57 ; சிலப்.14 : 9.
ஒரு குழையொருவன்- பலராமன்; கலித்.26 : 1, 105 : 11.
4-5. வேழமேந்திய. . . . ஒருவனை; வேழம் - யானை; பலராமருக்கு வேழக் கொடியும்உண்மை, நின்னொன் றுயர்கொடி யானை (4 : 40)என்பதனாலும் பெறப்படும்.
6. எரிமலர் - தாமரைமலர்.8. ஒப்பு : திருஞெமரகலம் (பதிற். 31 : 7). 9.மணி - கௌஸ்துபம். 9-10. ஒப்பு, 13 : 1 - 2.
11. சேவல் -கருடன்; சேவலோங்குயர் கொடியோயே 4 : 36)
13. அந்தணர்அருமறை : 3 : 14, 4 : 65; இறை. 1. மு.2 : 57.
6-13 (மேற்): ''பரிபாடலில் ஆசிரியம் வந்தது'' (தொல். செய்.121, பேர். ந.); பாப்பாவினம். 1. உரை, மேற்.
28. இருவர் - பிரமனும் காமனும்; காமனும்சாமனுமெனினுமாம்.
34. வல்லா - வன்மையில்லாத;சிலப். 16 : 99.
35. மெல்லிய -புன்மையையுடையன; மடவர் மெல்லியர் செல்லினும்(புறநா.106 : 4) என்பதன் உரையைப் பார்க்க.
35-6. அல்லியந்திரு; அல்லி - அகவிதழ்: அல்லிசே ரணங்கிற்கணங்கு,அல்லிசே ரணங்கு, அல்லியுட்பாவை (சீவக.162, 1329, 1505)
36. திருமறுமார்ப: 4 : 59, உரை முதலியவற்றைப் பார்க்க; கலித். 104: 10.
37-8. அந்தணர்காக்கும் அறன்: அந்தண ரென்போரறவோர் (குறள்,30)
41-2. அங்கண் . . .. திங்கள்: அங்கண் விசும்பி னகனிலாப்பாரிக்கும், திங்கள் (நாலடி.151)
46. புலம் - வேதம்;6 : 45.
47. வலனுயரெழிலி: முல்லைப். 4-5; நெடுநல். 1 - 2.
மாக விசும்பு : மதுரைக்: 454 அடிக்.
1 நூற் பெயரோடுஇல்லாத எண்கள் பரிபாடலுக் குரியவையென்று கொள்க.