48. நீடிய இமயம் :புறநா.2 : 19 - 24; மிக உயர்ந்த இமயமுமாம்; ஓங்கிய,வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட் டிமயம்(புறநா. 29: 13 - 5)
55. நின்னொக்கும் புகழ்நிழலவை : 3 : 46. இவ்வடியை வஞ்சித்தூக்கென்பர்(தொல்.செய். 121, பேர். ந.)
58. எள்ளுநர் . . .நேமியவை : 2 : 48 - 9. கடந்தட்ட - வஞ்சியாது எதிர்நின்றுகொன்ற.
55-8. ''நின்னொ. விகனேமி''யவை ''இவைஅஃறிணைப் பொருளன்றோ வெனின் தெய்வப்பொருண்மையான்உயர்திணையாம்'' (தொல்.கிளவி. சூ. 53. தெய்வச்.)
59. நின்னதுதிகழொளி சிறப்பிரு டிருமணி (2 : 52)
64. ஏம் = ஏமம் -இன்பம். 65. வாய்மொழி - வேதம் ; 3 : 12.
62 - 5 (மேற்) : ''பரிபாடல்காமங் கண்ணி வரும''் என்பதற்கு, ''காமரு . . . தொழுதே''(தொல். செய். 121, பேர். ந.) (1)
இரண்டாம்பாடல்
திருமால்
திருமாலே! மண்ணுலகமும் விண்ணுலகமும்பாழ்பட மதியமும் ஞாயிறும் கெடுதலால் அழகிழந்தவானமும் கெட்ட ஊழிகள் முறையே கழிய அதன்பின் ஆகாயஊழியும், காற்றுத் தோன்றிய ஊழியும், அதனினின்றுசெந்தீயும் அதனினின்று மழை முதலியனவும் அவற்றினின்றுநிலமும் தோன்றிய ஊழிகளுமாகிய அளவில்லாத காலம்கழிந்தபின் உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத்திருக்கோலம்கொண்டு நீ நிலத்தினை யெடுத்தாய். அச்செயலால்இக்கற்பம் வராககற்பமென்னும் பெயர்பெற்றது. அப்பெயர்நின் செயலுள் ஒன்றனையே உணர்த்தும். இங்ஙனம் நீசெய்த பல செயல்களுக்கும் உரிய கற்பங்கள் யாவரானும்அறியப்படாதன. அத்தகைய பெருமையை உடைய ஆழிமுதல்வ!நின்னைத் தொழுவேம்.
சங்கின் நிறத்தையுடையபலதேவனுக்கு நீ பிறப்பு முறையால் இளையை;இருள்போலும் உடையையும் பனைக் கொடியையும் உடையஅவனுக்குச் சிறப்புமுறையால் முதியையாகின்றாய்;ஞானியர்கள் ஆராய்ந்தவேதத்தை ஆராய்ந்துணரின்நீ உயிர்தொறும் அந்தர்யாமியாய் நிற்கின்றாயென்பதுவிளங்கும்; இவை நின்நிலைமைகள்.