உ
கடவுள் துணை
பரி பாடல்
மூலமும் உரையும்
-----
முதற் பாடல்
திருமால்
பொருட் சுருக்கம்
(11) சேவலங் கொடியோய்! (27) அண்ணலே!! (28)
இலங்குபூண்
மாலே! (36) திருமறு மார்ப! (65) வாய் மொழிப் புலவ!
1 - 5: நீ, ஆதிசேடனுடைய ஆயிரந்தலைகளும் நின்
திருமுடிக்கு
மேலே விரிந்து நிழற்றாநிற்ப மார்பினிடத்தே திருமகள் வீற்றிருப்ப
விளங்காநின்றனை; மேலும் பலதேவனாகவும் இருக்கின்றனை.
6 - 13: நீ, தாமரைமலரை ஒத்த கண்களை உடையை;
காயாம்பூவை ஒத்த திருமேனியை உடையை; திருமகள் விரும்பியுறையும்
மார்பினை உடையை; அந்த மார்பினிடத்தே விளங்குகின்ற
கௌத்துவமணி அணியை உடையை; பொன்னாடையை
அணிந்துள்ளனை; நினது பெருமையை அந்தணருடைய வேதம்
விளங்கக் கூறாநிற்கும்.
14 - 25: * * * * *
26 - 32: நீ, நின்னோடு பகைத்தெழுந்தவருடைய வலி
கெட
வென்று போரிடத்தே மேம்பாடுடைய தலைவனாக விளங்கா நின்றனை;
நீ காமனும் சாமனுமாகிய இருவருக்கும் தந்தை |
|
|
|