104

தங்கள் மேலிருந்த பகற்காலத்துக்குரிய அணிகளைநீக்கினர். மாலைக் காலத்தில் மலரும்மலர்களையும் தோளணி தோடு முத்துவடம் முதலானஆபரணங்களையும் அணிந்தனர். பலர் பாடினர்.அவர்களுடைய பாடலும் பரவலும் புகழ்தலும் ஆடுவாருடையஆடலொலியும் அதற்குரிய தாளவொலியும்தேனீக்களுடைய ஒலியும் மிக்கன. அங்ஙனம் எழுந்தபண்ணொலியைக் கேட்டுத் தம் இனமென்று கருதிஊரிலிருந்த வண்டுகள் எதிர்வந்து ஊதின;பாடுவார்களது பூவேய்ந்த கொண்டைமேல்தேனையுண்டிருக்கும் வண்டுகள் உடன்வந்து ஊதின.யாவரும் தென் திசையை நோக்கி மீண்டனர்.அப்பொழுது மாடத்தினுள்ளிருந்து மேலெழுந்த அகிற்புகையானது மலையின் மேல் தங்கி எழுந்த பனியைஒத்தது.

வெள்ளத்தைக் கண்டு இவ்வாறுவிருந்தயரும் மதுரையில் இசைக்குரிமையுடைய பாணரும்கூத்தரும் ஒருங்கு புகழ்ந்து தொழ வறுமையையுடையபுலவர்களுடைய கைந்நிறையப் பொன்னைச் சொரியும்பாண்டியனைப்போல வையைநதியானது வயலின்கண்பொன்னைப் பரப்பும் செயல் நீங்காமல் என்றும்இருப்பதாக!

(10)மலைவரை மாலை யழிபெயல் காலைச்
செலவரை காணாக் கடலறைக் கூட
நிலவரை யல்ல னிழத்த விரிந்த

(பரி - ரை.) 1-8. வையைப்புனல்மலையிடத்து மாலைக்கட்பெய்த மிக்க பெயலான்எல்லைசென்று காணப்படாத கடலைக் கூடுதற்குக்காலைப்............போந்தது.

1. ஈண்டுஏதுப்பொருண்மைக்கண்வந்த ஆனுருபுஇறுதிக்கட்டொக்கு நின்றது.

2. ''சென்று'' என்பது ''செல்ல'' எனத்திரிந்தது.

3-8. நிலவெல்லைக்கட் பசிமுதலியதுன்பங்கள் சுருங்க விரிந்த பல பூக்கள் நெருங்கினபோர்வையுடனே பருமணலை மூடி வரியையுடையவண்டு.......முகிழ்விரிசினையின் கண்ணவாகியமாந்தளிர்களுடனே வாழையிலைகளை மயக்கிஆராய்ந்து அளவிடப்படாத பல ஓசையும் ஒலிக்கக்கரைகாவலரையழைக்கின்ற பறை அறையப்போந்ததெனக் கூட்டுக.
_________________

(பி - ம்.) 2 ''கடல்வரைக்கூடி'' 3-4''யல்லலிழக்கவிரிந்தபுலவுறு''