121

அவர்களுடைய மாலைகளிலுள்ள பூவையூதும் வண்டினம்யாழைப்போலப்பாடும் இசையைக்கேண்மின்; இனியசுரும்பினது பாலை இசையைக் கேண்மின்;விளரிப்பாலையில் தோன்றும் யாமப்பண்ணைத்தாளத்தோடு பாடும் தும்பியினத்தைக் காண்மின்:தான் விரும்பிய பூவை நெரித்த ஒருத்தியைக்கோபத்தோடு அடித்து மீண்டும் அடிக்கவரும் ஒருதும்பியின் கோபத்தைப் பார்மின்'''' என்று சிலஆடவர் அங்கே நிகழ்வனவற்றைக் காட்டினர்.

பரிபாடலாற் புகழ்பெற்ற வையையே!கன்னித்தன்மை முதிராத கைக்கிளைக்காமத்தைத்தருகின்ற நின்னிடத்து இத்தைந்நீராடலைமுற்பிறப்பிற் செய்த தவத்தாலே இப்பிறப்பிற்பெற்றேம்; அதனை நின் நீர்நிறைவின்கண்ணேமறுபிறப்பினும் பெறுவேமாக!

இங்ஙனம் வரைவு மலிந்த தோழிவையையை நோக்கித் தலைமகன் கேட்பக் கூறினாள்.

(11)விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை யெழில்வேழந் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்தமூன் றொன்பதிற் றிருக்கையுள்

(பரி - ரை.)1 - 3. விசும்பு மதியத்தோடுபுணர்ப்பனவாகிய எரியும் சடையும் வேழமுமுதலாகஅவற்றின் கீழிருந்து வீதியால் வேறுபடுக்கப்பட்டஓரொன்று ஒன்பது நாளாகிய மூவகையிராசிகளுள்.

மேலவாய நாண்மீன்களைக் கீழதாகிய மதிபுணர்தலாவது அவ்வநேர் நிற்றன் மாத்திரமாகலின்அவற்றை ''விசும்புபுணர்ப்ப'' என்றார்.

2. எரி - அங்கியைத் தெய்வமாகவுடைய கார்த்திகை;அதனால் அதன் முக்காலையுடைய இடபம்உணர்த்தப்பட்டது. சடை - சடையையுடையஈசனைத்தெய்வமாகவுடைய திருவாதிரை: அதனால்அதனையுடைய மிதுனம் உணர்த்தப்பட்டது. வேழம் -வேழத்திற்கு யோனியாகிய பரணி : அதனால்அதனையுடைய மேடம் உணர்த்தப்பட்டது.

இவை முதலாக இவற்றின் கீழிருத்தலாவது இவற்றதுபெயரான் இடபவீதி மிதுனவீதி மேடவீதியெனவகுக்கப்பட்டு அம்மூவகை வீதியுள்ளும் அடங்குதல்.அவற்றுள் இடபவீதி : கன்னி துலாம் மீனம்மேடமென்பன; மிதுனவீதி : தேள் வில்லு மகரம்கும்பமென்பன; மேடவீதி : இடபம் மிதுனம் கற்கடகம்சிங்கமென்பன. ஓரிராசியாவது இரண்டே கால்நாளாகலின் நந்நான்கிராசியாகிய இவை ஓரொன்றுஒன்பது நாளாயின. கோட்களுக்கு இடனாகலான் இவைபன்னிரண்டும் ''இருக்கை'' எனப்பட்டன.
______________________

(பி - ம்.)1 ''மதியொடு''