137

ஊரில் மலிந்தது. அவருடைய அழகு அவ்வார்த்தையிலும்மிக்கது. அவ்வழகு மிக்கு மற்றவற்றோடு மாறுபாட்டினைக்கொண்டது. அவர் மார்பினின்று அழிந்து வீழ்ந்ததகரச்சாந்தால் மணல் சேறாயிற்று. அவருடைய ஈரத்துகிலிலிருந்துபொசிந்த நீரால் கரை கார்காலத்திற்குரிய தன்மையைப்பெற்றது. இத்தகைய நீர்விழவால் வானுலகம் சிறப்பொழிந்தது.

வையையே! நின்னால் இப்பழைய நகரில் வாழ்வார்க்கு இன்பமும் அழகும் மிகப்பல உளவாயின; அதனால் இவ்வுலகம் அகன்றதாயினும் நின்புகழை அடக்கிக் கொள்ளமாட்டாதாயிற்று; அவ்வளவு விரிந்த புகழை உடையாய் நீ.

இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர் தலைவர்.

(12)வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி
விளிவின்று கிளையொடு மேன்மலை முற்றித்
தளிபொழி சாரற் றதர்மலர் தாஅய்
ஒளிதிக ழுத்தி யுருகெழு நாகம்

(ப - ரை.) 1 - 8. வளியாற் பொரப்பட்ட வானம் மின்னையும் இருளையும் மாறிமாறிப் பரப்பிக் கிளையோடு சையமலையை முற்றித் தளியை இடைவிடாது பொழிந்த அதன் சாரலில் உதிர்ந்தமலர் தன் மேற்பரக்கக் கரைக்கண் நாகம் அகில் வழை ஞெமை சந்தனம் இவை வருந்தத் தகரத்தையும் ஞாழலையும் தேவதாரத்தையும் ஏந்திக்கொண்டு வையை வருகின்ற வரவு ஒரு கடல் கிளர்ந்து வருகின்றாற்போலும்.

4. ''''நெட்டிலைவஞ்சிக்கோ'''' (பழம்பாடல்) என்புழியும் ''''புல்லிலை வஞ்சிப் புறமதி லலைக்கும் கல்லென் பொருநை'''' (புறநா.387) என்புழியும் மரவிசேடத்திற்குள்ளன அதன் பெயர்த்தாய ஊரின்கண்ணும் ''''திங்கள்வெண் குடையி னார்க்குத் திருவிழுக் குற்ற வண்ணம் பைங்கதிர் மதியிற் றெள்ளிப் பகர்ந்தெடுத் துரைத்தும்'''' (சீவக.199) என்புழிச் சந்திரற்குள்ளது அவன் பெயர்த்தாய அறிவின்கண்ணும் ஏற்றப்பட்டாற்போல் (பி - ம். அவ்வூரினகணு நதிங்க கணொவினகணணு மேற்பட்டாறபோல) ஒளிதிகழாநின்ற உத்தியினையுடைய அச்சத்தைத் தருகின்ற நாகமெனப் பாம்பிற்குள்ளது அதன் பெயர்த்தாய மரத்தின் கண் ஏற்றப்பட்டது.