(13) | மணிவரை யூர்ந்த மங்குன் ஞாயிற் றணிவனப் பமைந்த பூந்துகில் புனைமுடி இறுவரை யிழிதரும் பொன்மணி யருவியின் நிறனொடு மாறுந்தார்ப் புள்ளுப்பொறி புனைகொடி | 5 | விண்ணளி கொண்ட வியன்மதி யணிகொளத் தண்ணளி கொண்ட வணங்குடை நேமிமால் பருவம் வாய்த்தலி னிருவிசும் பணிந்த இருவேறு மண்டிலத் திலக்கம் போல நேமியும் வளையு மேந்திய கையாற் | 10 | கருவி மின்னவி ரிலங்கும் பொலம்பூண் அருவி யுருவி னாரமொ டணிந்தநின் திருவரை யகலந் தொழுவோர்க் குரிதமர் துறக்கமு முரிமைநன் குடைத்து சுவைமை யிசைமை தோற்ற நாற்றமூ |
(பரி - ரை.)1-6. நீலவரைக்கட்பரந்த இளஞாயிற்றினது அழகு போலும் அழகமைந்த பீதாம்பரத்தையும் நீலவரையைஊர்ந்த இளஞாயிற்றினது அழகுபோலும் அழகமைந்த புனைமுடியையும்அவ்வரையினின்றிழியும் பொன்மணிகளையுடைய அருவியின்நிறத்தொடு மாறுகொள்ளும்தாரினையும் புள் எழுதிய புனைகொடியையுமுடையையாய் விண்ணின்கண்நின்றுஅளித்தற்றொழிலைக்கொண்ட நிறைமதியது குளிர்ச்சியை யொக்கக் குளிர்ந்த அளித்தற்றொழிலைக்கொண்ட மாலே! 1. மங்குல் ஞாயிறு - இருளைக் கெடுக்கும் ஞாயிறு; இதனை ''''நோய் மருந்து'''' (குறுந்.360) என்றார்போலக் கொள்க. 6. அணங்குதல்-அசுரரை வருத்துதல். 7-13. கார்ப்பருவம் வாய்த்தலையுடைய பெரிய மேகத்தை இருபாலுமணிந்த இருசுடர்களது இலங்குதல்போல இலங்கும் நேமியையும் சங்கையுமேந்திய கையுடனே அகலத்தைத் தொழுவோர்க்கு நினக்குரித்தாய் நீ மேவிய வைகுண்டமும் உரிமையாதலையுடைத்து. 7. வாய்த்தலினையென்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தொகுதியையுடைய மின்னினது அவிர்தலையொத்து இலங்கும் பொன்னாரத்தை (10) முத்தாரத்தோடணிந்த நின் (11) வரைபோலும் அகலம் (12) என்க. 13. துறக்கமுமென்னும் உம்மை சிறப்பும்மை. 14-6. சுவைமுதலாய புலன்களும் நீ; அவற்றை நுகரும் பொறிகளும் நீ. (பி - ம்.) 10 ''பெரும்பெருமபூண'' 14 ''சுவைமையினிசைமை'' |