155

பெயரையும் அன்பு பொருந்திய நெஞ்சத்தையுமுடையஅந்தணர்களது அறத்தை விரும்பியோய்! அத்தன்மைகளையுடையாயாதலின்நாங்கள் விரும்பி நின்பாற் பொருந்திப் பொருந்திவழிபாடுசெய்கின்றோம்; அங்ஙனம் செய்வதன் பயனாகப்பின்னும் பின்னும் நின்புகழைக் காட்டிலும் பலவாகஅவ்வழிபாடுகள் ஆகும்படி அருள்புரிவாயாக.

(14)கார்மலி கதழ்பெய றலைஇ யேற்ற
நீர்மலி நிறைசுனை பூமலர்ந் தனவே
தண்ணறுங் கடம்பின் கமழ்தா தூதும்
வண்ணவண் டிமிர்குரல் பண்ணைபோன் றனவே
5அடியுறை மகளி ராடுந் தோளே
நெடுவரை யடுக்கத்து வேய்போன் றனவே
வாகை யொண்பூப் புரையு முச்சிய
தோகை யார்குரன் மணந்து தணந்தோரை
நீடன்மின் வாரு மென்பவர் சொற்போன் றனவே
10நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன
மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின
அழுகை மகளிர்க் குழுவை செப்ப
நீரயற் கலித்த நெரிமுகைக் காந்தள

(பரி - ரை.) 1 - 2. மிக்க கதழ்பெயலை மேகம்பெய்தலால் அதனை ஏற்ற மிக்க நீரான் நிறைதலையுடைய சுனைகள் பூமலர்ந்தன.

2. இடத்துநிகழ் பொருளின்தொழில் இடத்தின்மேல் நின்றது.

4. பண்ணையென்புழி ஐகாரம் பகுதிப்பொருள் விகுதி.

5 - 6. வேய் ஆடும் அடியுறைமகளிர் தோள்களை ஒத்தன.

7 - 8. சூட்டினவாகிய மயில்களின் குறைவற்ற குரல்.

8. கூடிப் பிரிந்தோரை.

10. கொன்றை மலர்களும்.

11 - 2. அழுகையையுடைய மகளிர்க்கு அது தீர்தற்பொருட்டுத் தாயர் புலிபுலியென்று சொல்லுமாறு வேங்கைப்பூ வியலறைக்கட் பரந்தன.

13 - 7. இவற்றோடு நெருங்கிய முகையையுடைய காந்தள் அவிழ்ந்த இதழ்நிரைதொறும் தோன்றியது விட்டகொடிக்கட்பூத்த செம்பூப் பரக்க நின்குன்று கார்காலத்தன்மை மிக்கது. இவற்றோடென்பது வருவிக்கப்பட்டது.

(பி - ம்.)4 ''வண்டின் குரல்'' 13 ''நொமுசைக் காந்தள்''