(15) | புலவரை யறியாப் புகழொடு பொலிந்து நிலவரை தாங்கிய நிலைமையிற் பெயராத் தொலையா நேமிமுத றொல்லிசை யமையும் புலவராய் புரைத்த புனைநெடுங் குன்றம் | 5 | பலவெனி னாங்கவை பலவே பலவினும் நிலவரை யாற்றி நிறைபய னொருங்குடன் நின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே சிலவினுஞ் சிறந்தன தெய்வம் பெட்புறும் மலரகன் மார்பின் மைபடி குடுமிய | 10 | குலவரை சிலவே குலவரை சிலவினும் சிறந்தது கல்லறை கடலுங் கானலும் போலவும் புல்லிய சொல்லும் பொருளும் போலவும் எல்லாம் வேறுவே றுருவி னொருதொழி லிருவர்த் தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம் | 15 | நாறிணர்த் துழாயோ னல்கி னல்லதை |
(பரி - ரை.)1-5. அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே பொலிந்து நில வெல்லையைத் தாங்கிய நிலைமை நீங்காத கெடாத சக்கரவாள முதலாகத் தொல்லிசைப்புலவர் ஆராய்ந்துரைத்த கொண்டாடப்படும் நெடிய குன்றங்களைச் சிறப்புவகையாற் கூறாது பொதுவகையாற் பலவென்றுரைக்கின். 5. ஆங்கு : அசை. 5-10. அப்பலவற்றுள்ளும் நிலத்துள்ளோரைப் பசிவெம்மை ஆற்றி நிறைபயன்களெல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படுகுன்று சில; அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலரையுடைய அகன்ற தடங்களுடனே மேகங்கள் படியும் சிகரத்தையுடையவாகிய குலவரைகள் சில சிறந்தன. 10-14. அக்குலவரைகள் சிலவற்றினும் கல்லென அறையும் கடலும் கானலும் போல வேறுவேறாகிய நிறத்தினையும் பிரிவில்லாத சொல்லும் பொருளும்போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனையும் தம் முன்னோனையுந் தாங்கும் நீண்ட நிலைமையினையுடைய புகழான் உயர்ந்த இருங்குன்றம் சிறந்தது. புகழானென்பது வருவிக்கப்பட்டது. 15. நல்கினல்லது-வெளிப்பட்டுக் கொடுப்பினல்லது. ________ (பி - ம்.) 1 ''புகழொடும்'' 2 ''நிலவரைத்தாங்கிய'''நிலையிற்பெயராது'' 3 ''யறையும்'' 4''புலவராயபபுரையுபுரைத்த'' 9 ''மைபடு'' 15 ''துழாயோனல்லதை'' |