ஒருசார் கெண்டையைப் போன்ற கண்மதுபானத்தாலும் புனலாட்டாலும் புலவியாலும் நிறம்சிவக்கவும்கூந்தலினின்று விழும் பூக்களிலிருந்து தேனொழுகவும்நீரில்விளையாடும் காதற்பரத்தையைப் பன்முறை ஒருதலைவன் தழுவினான்; அதனால் அவன் மார்பிலுள்ள கத்தூரிக்குழம்பு அழிந்ததும் அழியாததுமாக இருந்தது. அத்தோற்றம் பனியால் வளைந்த மூங்கில் அப்பனி நீங்கமேலே கிளர்ந்து தாக்குதலால் தேன்சோர்ந்துவிழும் மலையையொத்தது. இத்தகைய நிகழ்ச்சிகள்பாண்டியனது வையையின்கண் இயல்பாக நிகழ்வன. மேகம் மலையின்கண் பரவிய அளவிலேகரையில் திரைகள் பரவிநிற்கும். வையையே! கண்ணியும் தாரும் உடையமைந்தரும் கோதையையுடைய மகளிரும் பொருள்களைத்தானம்பண்ணி அதன்பயனாகிய போகத்தை நுகரவிரும்பி நாடோறும் ஆடுதலால் அவர் கையுறையாகியபொன்மீன் முதலியனவும் அவர் அணிந்த சாந்தும்மாலையும் ஈரம்புலர்த்தும் புகையும் நினக்குத் தரும்நிவேதனமும் இடையறாமல் இருக்கும் வண்ணம் மழையானதுமறாமற் பெய்க; அதனால் வெள்ளம் பெருகி நின்பால்வற்றாதாகுக. இங்ஙனம் கூறுமுகத்தால் தோழிவாயின்மறுத்தாள். (16) | கரையே கைவண் டோன்ற லீகை போன்மென மைபடு சிலம்பிற் கறியொடுஞ் சாந்தொடும் நெய்குடை தயிரி னுரையொடும் பிறவொடும் எவ்வயி னானு மீதுமீ தழியும் | 5 | துறையே முத்துநேர்பு புணர்காழ் மத்தக நித்திலம் |
(பரி - ரை) 1. கைவண்மையையுடைய பாண்டியனது ஈகைபோலுமென்று கண்டார் கூற. 3-4. நெய்குடை தயிர்போலும் நுரையோடும் பிறவற்றோடும் நீர்பெருகல் எவ்விடத்தும் மேன்மேல் அழியாநிற்கும். நீர்பெருகலென்பன அவாய்நிலையான் வந்தன. 5-10. ஒத்து முத்துச்சேர்ந்தவடம் தலைக்கோலமுத்து பொன்னணி வலமாகச் சுழிக்கும் யாற்றவாகிய கலங்குதலையுடைய புனல் (பி - ம்.)2 ''மைபடி'' |