(17) | தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை யசைத்த வேலன் கடிமரம் பரவின ருரையொடு பண்ணிய விசையினர் | 5 | விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ மாலை மாலை யடியுறை யியைநர் மேலோ ருறையுளும் வேண்டுநர் யாஅர் ஒருதிறம் பாணர் யாழின் றீங்குரலெழ | 10 | ஒருதிறம் யாணர் வண்டி னிமிரிசையெழ ஒருதிறம் கண்ணார் குழலின் கரைபெழ ஒருதிறம் பண்ணார் தும்பி பரந்திசை யூத ஒருதிறம் மண்ணார் முழவி னிசையெழ ஒருதிறம் அண்ண னெடுவரை யருவிநீர் ததும்ப | 15 | ஒருதிறம் பாடனல் விறலிய ரொல்குபு நுடங்க ஒருதிறம் வாடை யுளர்வயிற் பூங்கொடி நுடங்க |
(பரி - ரை.) 1-8. கோலப்படும் எரியும் இசையியங்களும் சந்தன முதலிய விரைகளும் அகிற்புகையும் கொடிகளும் ஒருங்கே வரத் தாம் தேன்விளைந்த மலர்களையும் குழைகளையும் பூத்தொழில்களையுடைய துகில்களையும் வடித்த மணியினையும் ஏந்தப்படும் இலையினையுடைய வேலினையும் சுமந்து வந்து கடிமரமாகிய கடம்பை உரையாலே ஏத்தினராய் ஆளத்தியாலாக்கிய இசையினராய் விரிமலர்மதுவான் மரங்கள் நனையுங் குன்றத்து அடியின் கண் உறைதலை மாலைகள் தோறும் பொருந்துவாருள் தேவருலகத்து உறைதலை வேண்டுவாருளரோ? 2 - 3. சந்தனத்தைத் தெளித்து அரைக்கண்ணே வேலன் விடையைக் கட்டின பூசையையுடைய மரமெனக் கூட்டுக. கோலெரி (6) - தீபம். எழவெனவும் சுமந்தெனவும் நின்ற வினையெச்சங்களும்பரவினர் இசையினரென்னும் முற்றுவினையெச்சங்களும்இயைநரென்னும் தொழிற்பெயருள் இயைதலொடு முடிந்தன. 10. பூக்களாகிய புதுவருவாயினையுடைய வண்டு. 11. கரைபு 12. ..........போலும் இசையினை5 பாடுதல் நல்ல விறலியர். வினையது நன்மை வினைமுதன்மேல்நின்றது. 16. உளர்வயின் - அசைந்த விடத்து. (பி - ம்.) 2 ''விரைஇய'' 15 ''பாடல்விறலியர்'' ''யாடனல்விறலியர்'' |