18

நிலந்தோன்றாத ஆதிகாலத்தே வெள்ளத்தின் நடுவில் பிரமனோடு உந்திக்கண் தோன்றிய தாமரையையுடையவனாகிய நினது சக்கரமே உலகிற்கு நிழலாவது. அருள்புரிவாயாக.

(3)மாஅ யோயே! மாஅ யோயே!
மறுபிறப் பறுக்கு மாசில் சேவடி
மணிதிக ழுருபின் மாஅ யோயே!
தீவளி விசும்பு நிலனீ ரைந்து
5ஞாயிறுந் திங்களு மறனு மைவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசி லெண்மரும் பதினொரு கபிலரும்
தாமா விருவருந் தருமனு மடங்கலும்

(பரி - ரை)1.மாயோனென்பது, கரியோனென்னும் பொருள் குறியாதுபெயர் மாத்திரையாய் நின்றது; அது விளியேற்று''மாயோய்'' என்றாயிற்று.

2. அடிகளைப் பணியவேபணிந்தாரது மறுபிறப்பறுதலின், ''மறுபிறப் பறுக்குமாசில் சேவடி'' என்றார்.

3. மணிதிகழுருபு -நீலமணி (பி - ம்.நீலநிறம்) போலவிளங்காநின்ற நிறம்.

அச்சேவடி பெறுதற்குமுகம்புகுகின்றாராதலிற் பலகாலும் எதிர் முகமாக்கினார;்ஆக்கி வாழ்த்துகின்றவர் அவன்கட்டோன்றிய பொருள்கள்கூறுவான் தொடங்கி முதற்கண் ஈசற்கு வடிவாகிய அட்டமூர்த்தங்கள்கூறுகின்றார்:

4-5. அவை: தீ,வளி, விசும்பு. நிலம், நீரென்னும் பூதங்கள் ஐந்தும்ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனுமென இவை.

5. வேட்கின்றவடிவு தருமமாதலின் அஃது அறனெனப்பட்டது.

உலக நடைக்குஏதுவாகிய கோட்கள் எழுவருள் ஞாயிறும் திங்களும் மேற்சொல்லியஅட்டமூர்த்தங்களுள் அடங்கினமையின், ஏனையோரைப்பெயர்கூறாது ''ஐவரும்'' என்றார்; பாம்புகள் காணப்படுவனஅன்மையிற் கூறாராயினர்.

6. திதியின்சிறார் - அசுரர். விதியின் மக்கள் - ஆதிப்பிரமற்குநினைவால்தோன்றிய பிரமர் பதின்மருட் காசிபன்மக்களாகியஆதித்தர் பன்னிருவரும்.

7. எண்மர் - வசுக்கள்.உருத்திரரைக்கபிலரென்றார், அவர் செய்யராதலின்.

8. தேவர்மருத்துவரைத்தாவும் மாவின்கண்தோன்றிய இருவரென்றார்;

(பி - ம்.)3''ழுருவின்'' 4 ''நிலநீர்''