அக்குன்றத்தின்கண் தாள ஒலியும் சிறந்தவாத்தியங்களின் ஒலியும் மேகங்களின் முழக்கமும்போர் முழக்கத்தைப் போல எழுந்தன. அருவிகள் ஒலித்துஇழிவதால் சிகரங்கள் முத்தாரங்களை அணிந்தாற்போன்றுள்ளன.குருவிகள் ஆரவாரம் செய்யுமாறு தினைக்கதிர்கள்விளைந்தன. கரையினின்றும் சாய்ந்த கொறுக்காந்தட்டையை முட்டுகின்ற பலநிற மலர்கள் நிறைந்தசுனை இந்திரவில்லை வளைத்த வானத்தை ஒத்தது. வேற்படையையுடைய செல்வ! யாழோசையும் இயற்பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியும் பூவும் தூபதீபங்களும் ஆகிய உபசாரங்களை ஏற்றருளிய நின் அடியின்கண் எமக்குரிய இருப்பிடத்தைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடு உறைதலை நீங்காது இருப்பேமாக! அங்ஙனம் இருக்க அருள் புரிவாயாக! (18) | போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தபக் காரெதிர்ந் தேற்ற கமஞ்சூ லெழிலிபோல் நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச் சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்நின் | 5 | சீர்நிரந் தேந்திய குன்றொடு நேர்நிரந் தேறுமா றேற்குமிக் குன்று; |
(பரி - ரை.)1-6. தம்முட்கூடிப் போரையேற்ற அவுணரது வலியானுண்டாகிய பெருமிதம் கெட விசும்பின்கட்பரந்து கார்காலத்தை யெதிர்ந்த நிறைந்த சூலையுடைய மேகம்போலிருண்டு நீரைப்பரந்தேற்ற நிலத்தால் தாங்கப்படும் கடற்பரப்பினுட் பரந்து சுற்றிய சூர்மாவைத் தபுத்தோய்! நின்னைப்பயந்தபுகழைத் தான் அகன்று ஏந்திய இமயத்தொடு நேர்நின்று ஏறுமாறாதலை யேற்கும் இப்பரங்குன்று. மதந்தப மாதபுத்தோயென இயையும். 6. ஏறுமாறென்பது பகைத்தற்கு ஓர் உலகவழக்கு. நீ விரும்புதலால் இப்பரங்குன்று நின்னைப்பயந்த இமயம்போலப் புகழ்பெற்றது என்றவாறு. இனி முருகவேளைப் படர்க்கையாக்கி இம்மலைச்சிறப்புக் கூறுகின்றார்:- (பி - ம்.) 2 ''கயஞ்சூழெழிலி'' 4 ''மாதபுத்தோய்'' 5 ''நீர் நிரந்'' ''றேற்றருங்குன்று'' |