நின்குன்றத்தையடைந்து நினது கொடிஏற்றப்படும் யானையின் கும்பத்தைக்குங்குமத்தால் அலங்கரித்துப் பூவும் நீரும்தெளித்துச் செவிக்கவரிகளைச் சார்த்திப்பவளக்காம்புடைய பொற்குடையை மேலே கவித்துக்கல்யாணமான மகளிரும் கன்னி மகளிரும்பூசைசெய்தனர்; அப்பூசைக்கண் அந்த யானையுண்டகவளத்தின் சேடத்தை அவர்கள் உவந்து உண்டனர்;அங்ஙனம் உண்ணாவிடின் மகளிர் தம் காதலருடையசிறந்த அன்பை எய்தார்; கன்னி மகளிர் குறைவற்றமணாளரைப் பெறார். குறப்பெண்ணாகிய வள்ளி நாச்சியாரைமணம்புரிந்தருள்வோய்! எம் வாழ்த்தை நின்செவிக்கு உணவாகக் கேட்டருளல் வேண்டும். நின் ஆடையும் மாலையும் சிவந்தநிறமுடையன. அங்ஙனமே நின் வேலாயுதமும்பவழக்கொடியைப்போன்ற நிறத்தைக் கொள்ளும்.நின் திருவுருவமும் எரிகின்ற தீயை ஒக்கும்.திருமுகமும் இளங்கதிரவனை ஒக்கும். உலகிற்குத்துன்பத்தைச் செய்த சூரபன்மாவாகியமாமரத்தைத்தடிந்தோய்! பகைமையையுடையகிரவுஞ்சமலையில் வேலைச் செலுத்தி அம்மலையைஉடைத்தோய்! நீ இக்குன்றத்தில்கடம்பமரத்தின்கண் விரும்பிப் பொருந்தியநிலையை உடன்மேவிய சுற்றத்தாரோடு துதித்துத்தொழுது வாழ்த்தினேம்; அருள்புரிவாயாக. (19) | நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந் தருமுனி மரபி னான்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரு மியைகென வீத்தநின் | 5 | தண்பரங் குன்றத் தியலண நின்மருங்கு |
(பரி - ரை.) 1 - 7. வானின்கண் உறைதற்கு ஏதுவாகிய விருப்பத்தை நீ நில வெல்லையிடையுங்கொண்டு அறிவெல்லையால் அறியப்படாத புகழையுடைய கடம்பினை மேவி பெறுதற்கரிய இறைமையானமர்ந்த தேவரெய்தும் நுகர்ச்சியை......மக்களும் எய்துகவெனத் தந்த நின்னுடைய பரங்குன்றத்து இயல்கின்ற அலங்காரத்தையுடைய மயில் போலும் வள்ளியது வதுவை துறக்கத்துத் தெய்வயானையது சாறு......கொள்வது போலும். (பி - ம்.) 2 ''யறியாது'' |