203

மகளிர்கைபோற் குவிந்த காந்தள் முகையும் பாம்புகள் ஒன்றோடு ஒன்று கோபித்துப் படமெடுத்தாற் போன்றனவும் குடைவிரிந்தது போன்றனவும் ஆகிய காந்தள்மலர்களும் சுனையினின்று கழிந்து கீழ்விழும் மலர்களும் மரக்கிளைகளிலிருத்து உதிர்ந்த பூக்களும் புதல்களில் மலர்ந்த போதுகளும் ஆகிய இவற்றை அருவிகள் சொரிந்தன. அவற்றை அலைகளால் தள்ளிக்கொண்டு நெடிய பெரிய சுருங்கையின் நடுவாகிய வழியிலே வரும் புனலை மதுரையிலுள்ள மதில் சொரியும் பொழுது அப் புனல் களிறுகள் கையைத் தூக்கிவிடும் நீரை ஒத்தது.

இங்ஙனம் மயக்கமும் புணர்தலும் பிரிதலுமாகிய இக் காமத்தையும் கள்ளையும் உடன்விரவி மகளிர் யாவரும் பாராட்ட அவர்கள் தாம் விரும்பின காதலரோடு புனலாடுமாறு அப்பிரிந்த தலைவர்களைக் கொண்டுவந்து கூட்டுதல் வையைக்கு இயல்பு.

இவ்வாறு தலைவனுக்குக் கூறியதனாற் பாணன் ''''நீயும் தலைவி பால்வந்து சேர்தற்குரியை'''' என்பதைக் குறிப்பித்தான்.

(20)கடல்குறை படுத்தநீர் கல்குறை படவெறிந்
துடலே றுருமின மார்ப்ப மலைமாலை
முற்றுபு முற்றுபு பெய்துசூன் முதிர்முகில்
பொருதிகல் புலிபோழ்ந்த பூநுத லெழிலியானைக்
5குருதிக்கோட் டழிகறை தெளிபெறக் கழீஇயின்று
காலைக் கடல்படிந்து காய்கதிரோன் போயவழி
மாலை மலைமணந்து மண்டுயின்ற கங்குலான்
வானாற்று மழைதலைஇ மரனாற்று மலர்நாற்றம்
தேனாற்று மலர்நாற்றஞ் செறுவெய லுறுகால

(பரி - ரை) 1-5. சூல் முதிர்ந்தமுகில்மலையொழுங்கைச் சூழ்ந்து சூழ்ந்து அதன் கல் துணிபடஎறிந்து உடலாநின்ற உருமேற்றினம் ஆர்ப்பப் பெய்துகடலைக் குறைபடுத்த நீராலே தன்னொடு பொருது மாறுபடும்புலியைப் போழ்ந்த புகர்நுதல் யானையதுகுருதிக்கோட்டின்கணின்று இகப்பரிய கறையைத் தெளிவுபெறக்கழுவிற்று.

மழைத்துளிகளது விசைகூறுவார்கறைகழுவிற்றென்றார்.

6-11. காலைப் பொழுதின்கட் கடலைமுகந்துமாலைப் பொழுதின்கண் வெய்யோன் போயதிசைக்கண் மலையைச்சேர்ந்து கங்குற்கண்மேகந்தரும் மழை பெய்தலான் வையை மரங்கள் தரும்மலர்நாற்றமும்

(பி - ம்.) 9 ''லுறுகாலைக்''