215

(21)ஊர்ந்ததை எரிபுரை யோடை யிடையிமைக்குஞ்சென்னிப்
பொருசமங் கடந்த புகழ்சால் வேழம்
தொட்டதை தைப்பமை சருமத்திற் றாளியை தாமரை
துப்பமை துவர்நீர்த் துறைமறை யழுத்திய
5வெரிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த
வரிமலி யரவுரி வள்புகண் டன்ன
புரிமென் பீலிப் போழ்புனை யடையல்
கையதை கொள்ளாத் தெவ்வர்கொண் மாமுத றடிந்து
புள்ளொடு பெயரிய பொருப்புப்புடை திறந்தவேல்
10பூண்டதை சுருளுடை வள்ளி யிடையிடு பிழைத்த
உருளிணர்க் கடம்பி னொன்றுபட கமழ்தார்
அமர்ந்ததை புரையோர் நாவிற் புகழ்நல முற்றி
நிரையே ழடுக்கிய நீளிலைப் பாலை
அரைவரை மேகலை யணிநீர்ச் சூழித்
15தரைவிசும் புகந்த தண்பரங் குன்றம்
குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும்
வென்றிக் கொடியணி செல்வநிற் றொழுது;

(பரி - ரை.) 1 - 2. விளக்கத்தால்எரியையொத்த ஓடைநடுவே கிடந்து விளங்குஞ்சென்னியை யுடைத்தாய வேழம்.

3 - 7. தொட்டது தாமரைத்தாளிற்குஇயைந்த பவழம்போலும் துவர்நீர்த் துறையிலே மறையஅழுத்திய சருமத்தால் தைத்தல் அமைந்தமுதுகிற்றோலுடனே அதன் முழுமயிர் மிடைந்தபாப்புத்தோலைக் கீறின வாரையொத்தபீலிப்போழாற் புனைந்த அடையற் செருப்பு.

தாளியை தைப்பமை யென்பனவும்அடையலென்பனோடு இயையும்.

8. நின்னை மதியாத அவுணர் தமக்குத்துணையாக மதித்த மா.

9. புள் - அன்றில். புடை - பக்கம்.

10-11. சுருளுதலையுடைய. இடையிட்டுத்தொடுத்த கடம்பம் பூவினையுடைய ஒன்றுபட்டு அலர்ந்ததார்.

13. ஏழு நிரையாக அடுக்கிய நீண்டஇலையையுடைய பாலை; என்றது ஏழிலைப்பாலையை.

14 - 5. அதனையுடைய அரைமலையாகியஇலகடத்தினையும் அருவியாகியபடாத்தினையுமுடைத்தாய்த் தரையின்கணின்றுவிசும்பையுற ஓங்கிய பரங்குன்றம்.

16. இக்குன்றத்து அடியின்கண் உறைதல்மறுபிறப்பினும் இயைகவென.

17. வென்றியாற் கொடியை அலங்கரித்த செல்வ!