52. அருவியிசைக்கு முழவோசை : 17 : 13-4 குறிப்புரை;22 : 36-7.
55. சூடுநறவு-நறவம்பூ.
56. சூடாநறவு-காமபானம்; இது வெளிப்படையென்னும் இலக்கணத்தின்பாற்படும் கள் காமத்தை மிகுவித்தலின் ''நறவொடு காமம் விரும்ப'' என்று கூறினார்; ''''முற்றா நறுநறா மொய்புன லட்டி'''' (20 : 52) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.
55-6. இருவகை நறா. 7 : 63-4.
58-9. போகத்திற் சிறந்ததாகலின் நாகருடைய நகரை ஒக்குமென்றார்; ''''நாகநீ ணகரொடு நாகநா டதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார் நகர்'''' (சிலப்.1 : 21-2); பள்ளிமாட மண்டபம் பசுங்கதிர்ப்பவணமே (சீவக. 146)
60. மணிமருள் கூந்தலென இயைக்க
61. அரி மது மகிழ்பு - அரித்துச் செய்யப்பட்ட கள்ளை உண்டு.
62. மணிமயில் : பரி. 15 : 40 குறிப்புரை. (மேற்.) ''நடைமயிலே'' என்பதற்கு ''மணிமயிற்றொழில்'' என்பது மேற்கோள்; பிரயோக.சூ. 42 உரை.
64. கல்சேர். . . .. நகர் : இத்தொடர் மாடக்குளக்கீழ் மதுரையென்பதை நினைப்பிக்கின்றது: ''''கொண்மு மாடங்கள் கூடலின் மீறியும் நண்ணி நீள்கடல் கொள்ளா நகரிதான் மண்ணின் மாடக் குளக்கீழ் மதுரையென் றெண்ணில் காலத் திலங்கிய தெங்கணும்'''' (திருவால.12 : 13)
67. இருதிறத்தோர்-தேவரும் அசுரரும்.
70. தோழம்-ஒரு பேரெண்; ''''உண்ணற்கரிய நஞ்சை யுண்டொரு தோழந் தேவர். விண்ணிற் பொலிய வமுத மளித்த விடைசேர் கொடி யண்ணல்'''' (திருப்புறவம்.தே. திருஞான.); திருவா.திருவெம். 10.
74. மணி புரை மாமலை : பரி. 9 குறிப்புரை. மலைஞாறியஞாலம்: மலைநாறிய வியன்ஞாலத்து'''' (மதுரைக்.4)
77. இமயவில் நாணாகி : பரி. 5 : 24 உரை. கலித்.38
79. பரி. 1 : 1.
79-80. சேடன் : 1 : 1 குறிப்புரை.
80. (மேற்.) தொல்.பெயர். 12 நசெய். 121 பேர். (1)
இரண்டாம் பாடல்
வையை
பெரிய நிலம் தோன்றாமல் மிக்க மழைபொழிந்ததனால் வையை வெள்ளத்தைப்பெற்று மதுரைமாநகர்க்கு விரைந்துவந்தது. அவ்வையையானது நீரை அலங்காரமாகக் கொண்டதென்று அதனை விரும்பி மதுரையிலுள்ளார் உவகை மிக்கு நீர் விளையாட்டிற்குரிய அணிகளை மேற்கொண்டனர்.