238

திரட்டு : 3

வையை

அறவோ ருள்ளா ரருமறை காப்ப
செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை
மறுமுறை யானு மியைக நெறிமாண்ட
தண்வரல் வையை யெமக்கு.

(கு - ரை.) 3. மறுமுறை - மறுபிறப்பு :11 : 138 - 40; ''''எமர்தர வாரா தாயினுமிவணோற் றவனுறை யுலகத்தழித்துப்பிறந் தாயினும்எய்துதல் வலித்தனென்'''' (பெருங்.1. 36 : 113 - 5)

(மேற்.) ''என்பது பரிபாடல்;வெள்ளைச் சுரிதகத்தான் இற்றது''(தொல்.செய். 121 பேர். ந);இப்பகுதி ''''அறவோ ருள்ளா ரருமறைகாப்ப'''' என்னும் பரிபாடலின்இறுதியென்று தெரிகின்றது.

(பி - ம்.) 3 ''அறுமுறை'' (3)