241

திரட்டு : 6

மதுரை

1உலக மொரு 2நிறையாத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலாற்றூக்க-உலகனைத்தும்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக் கூட னகர்.

(கு - ரை) புலக்கோல் -அறிவாகிய கோல். நான்மாடக் கூடல்: தி.1:31 குறிப்புரை.இப்பாடற் கருத்தைத் தழுவி வந்தபிறஇடங்கள்: ''''உலகு மழிசையு முள்ளுணர்ந்து தம்மிற் புலவர்புகழ்க்கோலாற்றூக்க - உலகுதனை வைத்தெடுத்த பக்கத்துமாநீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம் வலிது'''' (திருச்சந்தவிருத்தம்தனியன்); மலரு மித்திரு நாட்டியல் வாணர்சொற்கோலால் உலகனைத்தையு நிறுப்பமுன் வாடிடா தோங்கும் அலகில் வண்புகழுடையது மதுரையாங் கதனை. இலக யான்சிறி தறிந்தவாறியம்புவல் கேண்மின்'''' (திருவால.திருநகர. 1);''''கைத்தலநான் கிரண்டுடைய மலர்க்கடவுண் மேலொருநாட்கயிலையாதி எத்தலமு மொருதுலையிட் டித்தலமு மொருதுலையிட்டிரண்டுந்தூக்க உத்தமமாந்திருவால வாய்மிகவுங்கனத்ததுகண் டுலகின்மேலா வைத்ததல மிதுவென்றா லிதன்பெருமை யாவரேவழுத்தற் பாலார்''''(திருவிளை.தலவிசேட 20); கச்சிமா நகரோர் தட்டுங் கடவுளருலகோர்தட்டும் வச்சுமுன் னயனார் தூக்க மற்றது மீது செல்லநிச்சய முறுகித் தாழ்ந்து நிலமிசை விழுமிவ் வூரைஇச்சகத் தூர்களோடு மெண்ணுதன் மடமைப்பாற்றே'''' (காஞ்சிப்.திருநகர. 1)

(6)


1 ''''உலகமொரு நிறையா'''' என்பது முதலிய இவ்வுறுப்புக்களாறும் புறத்திரட்டில்நகரென்னும் பகுதியில் உள்ளன. 2 (பி - ம்.) ''தலையாத் தானோர் துலையா''