திரட்டு : 7 | மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் இதழகத் தனைய தெருவ மிதழகத் தரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் | 5 | தாதி னனையர் தண்டமிழ்க் குடிகள் தாதுண் பறவை யனையர் பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோ னாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப ஏம வின்றுயி லெழுத லல்லதை | 10 | வாழிய வஞ்சியுங் கோழியும் போலக் கோழியி னெழாதெம் பேரூர் துயிலே. |
(கு - ரை) 1 - 4.''''நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ் நான்முகவொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டிற்காண்வரத் தோன்றிச் சுடும ணோங்கியநெடுநகர் வரைப்பின்'''' (பெரும்பாண்.402 - 5).பெருங்கதையில் இராசகிரியமென்னும் நகரத்தைத்தாமரைப்பூவாக உருவகஞ்செய்திருத்தல் இங்கே அறிந்துஇன்புறுதற்குரியது. 6. தாதுண்பறவை: ''''தாதுண் பறவை பேதுறலஞ்சி'''' (அகநா. 4: 11). பரிசில் வாழ்நர்; பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்'''' (சிறுபாண். 218) 8.''''ஓத லந்தணர் வேதம் பாட'''' (மதுரைக்.656); ''''கோதிலாத செஞ் சூட்டுடை வாரணங் கூவ ஓத ஞாலத்து மற்றைய தலத்துளார் விழிப்பர் ஈத லேற்றலோ டறுதொழி லிருபிறப் பாளர் வேத நாதத்தின் விழிப்பதவ் வியனகர் மாக்கள்'''' (திருவாப்பனூர்ப் புராணம்ஆப்பனூர்ச். 9). 11. கோழி - உறையூர். (7)
(பி - ம்.) 2 ''சீறூர்''''புரையும்பேரூர்'' 3 ''டனையதே'' 5 ''னனைய'' 7 ''னாவினிற்'' 11 ''பேரிருந்துயிலே'' |