243

திரட்டு : 8

ண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுத லுண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.

8. புகழ்பூத்த மதுரை: ''''மிக்குப்புகழெய்திய பெரும்பெயர் மதுரை'''' (மதுரைக். 699); ''''அலகில் வண்புக ழுடையது மதுரை'''' (திருவால.திருநகர.) (8)