திரட்டு : 11 | ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்கும் சேய்மாடக் கூடலுஞ் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார் போவாரார் புத்தே ளுலகு. |
11. ஈவாரைக் கொண்டாடி: ''''உரைப்பாருரைப்பவை யெல்லாமிரப்பார்க்கொன் றீவார்மேனிற்கும் புகழ்'''' (குறள்.232).ஏற்பாரைப் பார்த்துவத்தல்: ''''ஈத்துவக்குமின்பம்'''' (குறள்228); ''''கவர்வனர்போலக் காதலி னுய்த்தும்'''' (பெருங்.1. 39 : 54).சேய் - (இங்கே) பாண்டியன். |